ராதிகா வாயில் விழும் பயில்வான்.. மீண்டும் வெடிக்கும் பஞ்சாயத்து

Radhika : சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பல நடிகர், நடிகையை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் ராதிகா மற்றும் அவரது அம்மாவை பற்றி யூடியூபில் பயில்வான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ராதிகா எதர்ச்சியாக கடற்கரையில் பயில்வானே சந்தித்தார்.

அப்போது அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலான பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் திட்டி வீடியோக்களையும் வெளியிட்டனர். இப்போது மீண்டும் ராதிகாவின் வாயில் விழு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது சமீபத்தில் மலையாள சினிமாவில் நடக்கும் குற்றங்களை பற்றி ராதிகா கூறியிருந்தார். அதாவது அவரே மலையாள படம் ஒன்றில் நடிக்க கேரளா சென்ற போது நடிகர்கள் சிலர் நடிகைகள் துணி மாற்றும் வீடியோவை பார்த்து சிரித்ததாக கூறியிருந்தார்.

ராதிகாவை விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்

கேரளாவில் கேரவனுக்குள் கேமரா வைத்து நடிகர்கள் இவ்வாறு நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளித்ததாகவும் கூறியிருந்தார். இந்த பரபரப்பான விஷயத்தை ராதிகா கூறிய பிறகு இது எப்போது, எங்கு நடந்தது என்று ராதிகாவிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் ராதிகா யார் இதை செய்தார்கள் என்பதை சொல்ல மறுத்துவிட்டார். இதுதான் சாக்கு என பயில்வான் இப்போது ராதிகாவை வறுத்தெடுத்தார். அதாவது துணிச்சல் மற்றும் திராணி இருந்தால் யார் அதை செய்தார்கள் என்பதை காட்டிக் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு இத்தனை வருடமாக சோறு போட்ட சினிமா துறையில் இது மாதிரியான அசம்பாவிதம் நடக்கும் போது அதற்கான சாட்சி சொல்ல வர மாட்டீங்களா, இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா என பங்கமாக கலாய்த்து தள்ளி உள்ளார் பயில்வான் ரங்கநாதன். கண்டிப்பாக ராதிகா இந்த வீடியோவுக்கு பிறகு பயில்வானை திட்டி தீர்க்கப் போகிறார்.

ராதிகா பேச்சால் வெடிக்கும் சர்ச்சை

- Advertisement -spot_img

Trending News