ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அபிமன்யு சிங் (கொள்ளைக்கூட்டத்தின் தலைவன்) நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ தீரன் அதிகாரம் ஒன்று’.

Theeran Adhigaran Ondru

இந்த திரைப்படம் 1995- 2005 ஆண்டுவரை தமிழகத்தில் கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய வடமாநில பவாரியா கொள்ளையர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.

Dacoits

அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் திருவள்ளூர் டிஎஸ்பிக்களாக இருந்த விஜயகுமார், அருளரசு, ஜெயக்குமார்  உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் இடம்பெற்றிருந்தனர்.

SR Jangid & Team enquiring Oma

இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று இதில் இருந்த போலிஸார்கள் பேட்டியளித்தனர். கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் ஓமா புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.


மேலும் ஓமா சிறையில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டான் என்றும் கூறியுள்ளனர்.

DGP SR Jangid

தீரன் அதிகாரம் படத்தை திரையரங்கில் பார்த்ததும், 10வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் கண்முன் வந்தது போன்று உணர்ந்ததாகவும்; 10 ஆண்டுகள் கழித்து தமிழக போலீசாரின் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் பவாரியா ஆப்ரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்.