கேரள திரையுலகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சம்பவம் பாவனாவின் பாலியல் வன்கொடுமை! கேரள முதல்வர் பிரணயி விஜயன் துவங்கி சமுதாயத்தின் அத்தனை முக்கியஸ்தர்களும் இந்த சம்பவம் பற்றி தங்கள் கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்டார்கள். இந்த கொடூரத்தை நிகழ்த்திய பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் என்பவனை போலீஸ் கைது செய்திருக்கிறது.

யார் யாரோ கருத்து சொன்னார்கள். ஆனால் பாவனாவை தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்திய மிஷ்கின் மட்டும் இந்த நிமிஷம் வரைக்கும் அது பற்றி பேசவேயில்லை.

நியாயமாக இந்த பிரச்சனை பற்றி முதலில் வாய் திறக்க வேண்டியவரே மிஷ்கின்தான். ஏன்?

சித்திரம் பேசுதடி படம் பெரிய வெற்றி பெற்றபின், தமிழகத்தின் எல்லா கல்லூரிகளில் இருந்தும் சிறப்பு விருந்தினராக பேச மிஷ்கினை அழைத்தார்கள். கோவையில் அப்படியொரு கல்லூரி விழாவில் கலந்து கொள்ளப் போன மிஷ்கின், அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ஒரு மாணவர், “சித்திரம் பேசுதடி படத்தால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி கேட்க, “செக்ஸ் வித் பாவனா. வேற ஒண்ணும் இல்ல”. என்று பதிலளித்தார் மிஷ்கின். மாணவர்கள் ஓவென்று கத்தி சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை.

ஆக, முதல் பல்சர் சுனில் நம்ம மிஷ்கின்தான்!