சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பவா செல்லதுரை இவ்வளவு மோசமானவரா.? பிக் பாஸுக்கு வர வச்சு முகத்திரையை கிழித்த ஆண்டவர்

Bava Chelladurai: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் முதலில் கமலின் செல்ல பிள்ளையாக நுழைந்தவர் தான் எழுத்தாளரும் ஸ்டோரி டெல்லருமான பவா செல்லதுரை. இவரை தொடக்கத்தில் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார்கள். ஆனால் இவர் சொன்ன கதையை கேட்டதும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், அது குறித்து பெரிதும் விமர்சித்தனர்.

அது மட்டுமல்ல பவா சொன்ன கதையும் ஸ்ட்ராங்காவே இல்லை. அவர் சொன்ன பிழை என்ற கதை கிளைமாக்ஸையே மாற்றி விட்டுட்டாரு. அந்த கதையில் என்ன சொல்ல வந்திருந்தார்கள் என்பதை சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் தெளிவுபடுத்தினார். உண்மையாகவே கமல் பவா செல்லத்துரையை பிக் பாஸ் வீட்டிற்குள் வர வைத்து வச்சு செஞ்சு விட்டுட்டாரு.

Also read: கண்ணம்மாவிற்கு செக் வைத்த பிக் பாஸ்.. போரிங் கண்டஸ்டண்ட் என போட்ட அரெஸ்ட் வாரண்ட்

இதற்கு முன்பு பவாவை பற்றி எழுத்தாளர் சாரு கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பார். அது செம நக்கலாக இருக்கும். பவா செல்லத்துரை எல்லாம் ஒரு இலக்கியவாதியே கிடையாது. இவர் எல்லாம் இலக்கியவாதிகளையும் வீட்டுக்கு அழைத்து உடும்பு கறி போட்டு தன்னை இலக்கியவாதியாக சொல்ல வைத்து விட்டார். ஈபி அலுவலகத்தில் வேலை செய்த இவர், அதை ராஜினாமா செய்து விட்டு எந்தவித திறமையும் இல்லாமல் எழுத்தாளராக தன்னை  காட்டிக்கொண்டு பேரும் புகழுக்காகவே ஒன்னு ரெண்டு புத்தகத்தை படிச்சிட்டு கதை சொல்ல வந்ததால், இப்போது இவருடைய முகத்திரையை பிக் பாஸ் கிழித்தெறிந்து விட்டார்.

தான் ஒரு பெரிய எழுத்தாளர் எவருக்கும் பணிய மாட்டேன். நான் செய்தது தவறு என்றாலும் கடவுளே நேரில் வந்து சொன்னாலும் தன் இயல்பை மாற்றிக் கொள்ள மாட்டேன். மன்னிப்பு கூட கேட்க மாட்டேன் என இறுமாப்போடு பிக் பாஸ் வீட்டில் பவா செல்லத்துரை சுற்றித்திரிந்தார். வீட்டில் ஆங்காங்கே எச்சில் துப்பியதை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.

Also read: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை.. மேலே விழுந்த திருட்டுப் பழி

ஆனால் கமல் அதை சுட்டிக்காட்டி மற்றவர்களுக்கு பிரச்சினை வருகிறது என்றால் தன்னுடைய தவறை திருத்திக் கொள்வது தப்பில்லை என்று  சொல்லி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவராக திமிருடன் இருந்த பவா செல்லத்துரையின் அகம்பாவத்தை செதில் செதிலாக சிதைத்து இப்போது ஓட  விட்டுட்டாரு. ‘இனி ஒரு நிமிடம் கூட இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கவே முடியாது’ என பவா இப்போது அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார். வெறும் 4 கதை புத்தகத்தை மேய்ந்து விட்டு மைக் முன்னாடி நின்று பேசினால் நீ எல்லாம் பெரிய எழுத்தாளரா? பேச்சாளரா? படைப்பாளியா? என மறைமுகமாக பிளந்து கட்டி விட்டனர்

இனிமேலாவது எந்த எழுத்தாளரும் நான் தான் மேதாவி என இரு கொம்பு முளைத்திருக்கிறது என்ற திமிருடன் வேறு உலகத்தில் வாழாமல் பாமர மக்களோடு சேர்ந்து வாழுங்கள். சாதாரண மனிதர்களின் வாழ்வாதாரங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கனும். பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய டார்க் சைடை காட்ட வந்தேன் என சொல்லிவிட்டு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியே வேண்டாம் ஆள விடுங்கடா சாமி! என தெரிந்து ஓடி இருக்கிறார்.

Also read: பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பாவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

- Advertisement -

Trending News