60களில் ஒளிபரப்பான பேட்மேன் தொடர் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஆடம் வெஸ்ட் காலமானார். அவருக்கு வயது 88.

பேட்மேன் தொடர் மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

லுகேமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அதை அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் அறிவித்துள்ளனர்.

ஆடம் வெஸ்டின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கிறது.