fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கண்ணம்மாவுடன் சேர துடிக்கும் பாரதி.. ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய ப்ரோமோ!

Videos | வீடியோக்கள்

கண்ணம்மாவுடன் சேர துடிக்கும் பாரதி.. ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 சீரியலில் தற்போதுவரை முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வரும் சீரீயல்தான் பாரதி கண்ணம்மா. பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் மருத்துவர் மற்றும் ஒரு படிக்காத பெண்ணிற்கும் இடையே மலரும் ஒரு அழகான காதல் கதை. அதன்பின், மருத்துவர் பாரதியும் கண்ணம்மாவும் திருமணம் புரிந்து கொள்வார்கள். அது சவுந்தர்யா அதாவது பாரதியின் அம்மா அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை அவர்கள் எப்போதும் கண்ணம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.

இதற்கிடையே, மருத்துவரான வெண்பா பாரதியை ஒரு தலையாக காதலித்து வருவார். மருத்துவர் பாரதியை எப்படியாவது திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கண்ணம்மா பிரசவமாக இருக்கும் போது இது உனது குழந்தை அல்ல, இவள் தவறானவள் என்று அவரை மூளை சலவை செய்திருப்பார். இதன் காரணமாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்திருப்பார்கள்.

அதன்பின் கண்ணம்மாவிற்கு பிரசவம் ஆகும் போது குழந்தைகள் இரட்டை  குழந்தைகளாக பிறந்திருப்பார்கள். அதில் ஒரு குழந்தையை சவுந்தர்யா தனது வீட்டிற்கு எடுத்து சென்று வளர்ப்பு பிள்ளையாக வளர்த்து வந்திருப்பார். இந்தப்பக்கம், கண்ணம்மாவும் தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்தது என்று நினைத்திருப்பாள்.

அதற்குப் பின் தான், இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பார்கள். கண்ணம்மா விடம் வளரும் குழந்தை சௌந்தர்ய லக்ஷ்மி என்ற பெயரிலும் பாரதியிடம் வளரும் குழந்தை ஹேமா என்ற பெயரிலும் வளரும். இந்த இரு குழந்தைகளும் நண்பர்கள் ஆவார்கள். அதன்பின் கண்ணம்மாவின் குடும்ப சூழ்நிலை காரணமாக கண்ணம்மா தனது மகள் லக்ஷ்மியை பள்ளிக்கூடத்தில் பாரதி கொடுக்கும் ஸ்காலர்ஷிப் பணத்தில்
லக்ஷ்மி தன் மகள் என்று கூறாமல் சேர்த்திருப்பாள்.

ஹேமா மற்றும் லக்ஷ்மி படிக்கும் பள்ளியில் கண்ணம்மா சமையல் சமைத்து தருவார் அதனால் ஹேமா மற்றும் கண்ணம்மாவின் மகளுமான லக்ஷ்மியும் அவரை சமையல் அம்மா என்று அழைப்பார்கள். அதன்பின்,ஹேமாவுக்கு கண்ணம்மாவையும் லக்ஷ்மிக்கு பாரதியையும் மிகவும் பிடித்து விடும் ஆனால் இவர்கள் யாருக்குமே தெரியாது இவர்கள் பெற்றோர்-குழந்தைகள் என்று ஆனால் இது பாரதியின் குடும்பத்தில் பாரதிக்கும் மற்றும் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியைத் தவிர்த்து அனைவருக்கும் தெரியும்.

bharathi-kannamma-cinemapettai

bharathi-kannamma-cinemapettai

பல வருடங்களாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்திருந்தார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ப்ரோமோவில் பாரதி தனது குடும்பத்தாரிடம் “கண்ணம்மா, ஏன் நல்லவளாக இருக்க கூடாது? என் தரப்பிலும் தவறு இருக்கலாம் அல்லவா? இத்தனை வருஷமா நான் நம்பிக்கிட்டு இருக்கிற விஷயம் கூட தப்பா இருக்கலாம்? இதுக்குப் பிறகு வரக்கூடிய வருஷங்களிலாவது கண்ணம்மா உடன் ஏன் சேர்ந்து வாழக்கூடாது? என்று என் மனசு கெடந்து தவிக்குது’ இப்படியெல்லாம் பாரதி அந்த ப்ரோமோவில் பேசியுள்ளார்.

ஆனால், இதுபோன்ற சீரியலில் திடீரென்று திருப்பங்கள் வருகின்றது போல யாருக்காவது கனவு வந்திருக்கும் என்று கூறி முடித்து விடுவார்கள். ஆனால், இதில் பாரதி  வெகுநேரமாக பேசிக்கொண்டிருப்பது போல இந்த ப்ரோமோ இருக்கிறது. ஆகையால், இது கனவாக இருக்காது என ரசிகர்களால் நம்பப்படுகின்றது.

ஒருவேளை, இந்த ப்ரோமோ உண்மை என்றால் பாரதிகண்ணம்மா சீரியல் மறுபடியும் மிகவும் சந்தோஷமான மற்றும் மிகவும் ரொமேண்டிக்கான சீரியல் ஆக மாறிவிடும். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடதக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top