Reviews | விமர்சனங்கள்
தரமான சைக்கலாஜிக்கல் திரில்லர்.. காளிதாஸ் திரைவிமர்சனம்
நாளைய இயக்குனர் பிரபலம் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீத்தல் நடிப்பில் வெளியாகி உள்ள இன்வெஸ்ட்டிகேசன் த்ரில்லர் படம். நிதானமாகவே பயணிக்கும் இப்படத்தின் மேக்கிங் ஸ்டைல் நம் கோலிவுட்டுக்கு புதுசு தான். வாங்க படம் எப்படி என பார்ப்போம் ..
கதை – அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமான பெண்களின் மரணம் ஏற்படுகிறது. இது ப்ளூ வேல் கேம்மின் தாக்கம் என்ற கோணத்தில் துப்பறிகிறார் பரத். இது கொலை என்ற பார்வையில் உயர் அதிகாரி சுரேஷ் மேனன் ஆராய்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் மரணம், வேலை அழுத்தம் காரணமாக தன் மனைவியுடன் நேரத்தை செலவு செய்வதில்லை பரத். அதே நேரத்தில் மாடி வீட்டில் குடி வரும் ஆதவ் கண்ணதாசனுடன் பரத் மனைவி ஷீத்தலின் நெருக்கம் அதிகமாகிறது.
மரணமாகும் பெண்கள், அவர்களுக்கு உள்ள கள்ளத்தொடர்பு என படம் வேறு கோணத்தில் பயணிக்கிறது. லீட் கிடைத்து செல்லும் இடம் அனைத்திலும் டெட் எண்ட் தான். கடைசியில் கிளைமாக்சில் இந்த பெண்களை இணைப்பது பியூட்டி பார்லர் என்பது தெரியவர, கொலைகளை செய்வது யார், அதன் காரணம் என்ன என புரியவர முடிகிறது படம்.
சினிமாபேட்டை அலசல் – பல விதமான திரில்லர் படங்கள் நம் தமிழில் வெளியாகி வருவதால், இப்படத்திற்கு கட்டாயம் நல்ல ரீச் கிடைக்கும். சிறிய படமாக இருப்பினும் மிகவும் பொறுமையாகவே அணைத்து கதாபத்திரங்களும் பயணிக்கின்றனர். ஒரு ஒரு கட்டத்திலும் கொலையாளி இவர் தான் என நம்மை யூகிக்க வைத்த இயக்குனரின் திரைக்கதைக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ். பல இடங்களில் பின்னணி இசை சற்றே தூக்கலாக உள்ளது, அதை அடக்கி வாசித்திருக்கலாம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – அதிக எதிர்பார்ப்பு இல்லமால், திரில்லர் படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு முழு திருப்த்தி கொடுப்பான் இந்த காளிதாஸ். பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக எடுத்தற்கு இந்த டீமுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பொறுமையாக செல்லும், ஆனால் உங்க பொறுமையை சோதிக்காமல், செல்லும் இப்படம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3.25 / 5
