பொது வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 500ஆக இருந்தது. இதனை சில காலம் முன் எஸ்.பி.ஐ வங்கி திடீரென்று ரூபாய் 5000மாக மாற்றி வாடிக்கையாளர்களை அதிரவைத்தது.

கிராமப் புறங்களுக்கு மட்டும் இருப்பு தொகை ரூபாய் 1000 என்று அறிவித்திருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தது. மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இதனால் மூடிவிட்டனர்.

இதனால் தற்போது எஸ்.பி.ஐ தனது முடிவில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி இனி நகர மற்றும் பெரு நகரங்களில் குறைந்த பட்ச இருப்புத்தொகை ரூபாய் 3000மாம். மேலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இனி கிடையாது என்று அறிவித்துள்ளது.

பொது வங்கிகளில் இப்படி இருப்புத் தொகை அதிகப்படுத்துவதால் குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீண்டும் இது குறித்து ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விரைவில் எஸ்.பி.ஐ நல்ல முடிவெடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.