வர்மா அர்ஜுன் ரெட்டி ரி மேக், துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போட்டோ உள்ளே.

வர்மா

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. மகன் துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில் ரிமேக் செய்யப்பட்டது . பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே இதனை நாங்கள் ரிலீஸ் செய்யமாட்டோம். துருவை வைத்து ரி ஷூட் செய்து ஜூன் 2019 இல் ரிலீஸ் செய்வோம் என அறிவித்தனர்.

DHURUV IN VARMA

முதல் படத்திலேயே அதிக சர்ச்சைகள் தான். இயக்குனர் யாராக இருக்கும் என்பதே ஹட் டாபிக்காக இருந்து வரும் நிலையில் தற்பொழுது அடுத்த அறிவிப்பு வந்துள்ளது.

துருவுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார் பாலாவின் வெர்ஷனில். இந்நிலையில் ஹீரோயினாக பனித்தா சந்து நடிப்பார் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

பனித்தா சந்து

சீக்கிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். 20 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வரும் மாடல் மற்றும் நடிகை. 11 வயதிலேயே டிவி சீரியலில் நடித்தவர்.

Banita Sandhu

வோடபோன் மற்றும் டபிள் மின்ட் விளம்பரங்களில் நடித்து ரீச் ஆனவர். பாலிவுட்டில் வருண் தவான் ஜோடியாக அக்டோபர் படத்தில் அறிமுகம் ஆனவர்.

october

இவர் தான் துருவ் உடன் ரோமன்ஸ் செய்யப்போகிறார்.

Leave a Comment