போட்டியை தலைகீழாகப் புரட்டிப் போட்ட அந்த ஒரு ஓவர்.. ஹைதராபாத் அணியின் வெற்றியை தட்டிப்பறித்த பெங்களூர்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 33 ரன்களும், அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர்.

பின் எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். கேப்டன் வார்னர் மற்றும் மணீஷ் பாண்டேவும் நல்ல ஒரு அடித்தளம் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து எஸ்ஆர்எச் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

இந்த போட்டியில் 16வது ஓவர் வரை பெங்களூர் அணி தான் தோல்வி அடையும், ஹைதரபாத் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சூழ்நிலைதான் இருந்தது. கடைசி 24 பந்தில் 35 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. பெங்களூர் மீண்டு வருவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை.

ஆனால் சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் மொத்தமாக ஆட்டம் மாறியது. அந்த ஓவரில் அடுத்தடுத்து பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே, சமத் அவுட் ஆனார்கள். ஹைதராபாத்தை அணியின் ஹிட்டர்கள் மூன்று பேரும் ஒரே ஓவரில் அவுட் ஆனார்கள். இந்த ஒரு ஓவர்தான் மொத்தமாக போட்டியை மாற்றியது.

Sabash-Cinemapettai.jpg
Sabash-Cinemapettai.jpg

கடைசி நேரத்தில் 4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டை இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியை தன்னுடைய பெஸ்ட் பவுலர்களை வைத்து சாதித்துள்ளார் விராட் கோலி.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்