தந்தையை எரித்துக் கொன்ற மகள்.! பெங்களூரில் நடந்த பதறவைத்த சம்பவம்

பெங்களூரில் ராஜாஜி நகரை சேர்ந்த ஜெயக்குமார்  தொழிலதிபர் மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பூஜா தேவி, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி ஜெயகுமார் வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்துள்ளார், இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஜெயக்குமாரின் மகள் மற்றும் காதலன் பிரவீன் இருவரும் சேர்ந்து எரித்து உள்ளதாக தெரிகிறது.

மனைவி பூஜா மற்றும் மகனுடன் புதுச்சேரி சென்றிருந்தபோது அன்று இரவே இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் இதனைப்பற்றி வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை செய்து அவர்களை கைது செய்து உள்ளனர். தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இது போன்ற காதல் எதிர்ப்புக்காக பெற்றோர்கள் கொள்ளும் அளவிற்கு நடக்கும் கொடூர சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்தில் உள்ளனர்.

Leave a Comment