Sports | விளையாட்டு
இன்றைய டி 20 போட்டி நடக்குமா ? லேட்டஸ்ட் அப்டேட்
பங்களாதேஷ் அணி இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ளது. முதல் டி 20 போட்டி இன்று டெல்லியில், 7 மணிக்கு தொடங்குகிறது. இன்று துவங்கும் போட்டிக்கு காற்று மாசு என்ற காரணம் அச்சுறுத்தலாக உள்ளது.
நவம்பர் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி அளவில், மாசு அளவு 473 ஆக இருந்ததாம். மைதானத்துக்கு அருகில் இந்த அளவு 488 . டாஸ் போடுவதற்கு முன்பாக அதாவது 6.30 மணிக்கு போட்டி நடுவர், அம்பயர்களுடன் ஆலோசனை செய்து, போட்டியை நடத்துவதா இல்லை ரத்து செய்வதா என அறிவிப்பார்.
Delhi: Latest visuals from outside Arun Jaitley Stadium. India will play Bangladesh in the first T20i match, later today. pic.twitter.com/KehNVZ1Zd1
— ANI (@ANI) November 3, 2019
பலரும் போட்டி ரத்து செய்வதே நல்லது என சொல்லி வருகின்றனர். எனினும் பிசிசிஐ திட்டமிட்டபடி போட்டியை நடத்தும்.
