Connect with us
Cinemapettai

Cinemapettai

குறுக்கே வந்தது குத்தமாய்யா? சக வீரரை அடிக்கப் பாய்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிரியான அந்த ஒரு வீரர்

Bangabandu-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

குறுக்கே வந்தது குத்தமாய்யா? சக வீரரை அடிக்கப் பாய்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிரியான அந்த ஒரு வீரர்

வங்கதேச கிரிக்கெட் போர்டு நடத்தும் டி20 கிரிக்கெட் போட்டி பங்காபந்து என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் உள்ள ஐந்து உள்ளூர் அணிகள் இந்த போட்டியில் பங்கு பெற்று வருகின்றன.

பெக்சிம்கோ தாக்கா, பார்ச்சுன் பாரிசால் அணிகளுக்கு இடையில் டி 20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தாக்கா அணி 150 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பாரிசால் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக கேப்டன் ரஹீம் 43 மற்றும் யசீர் அலி 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தனர்.இந்த போட்டியில் ரஹீம் சக வீரர் ஒருவரிடம் கோபமாக நடந்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்சில் ஸாபிக்கல் இஸ்லாம் பவுலிங் செய்த போது ஆபிப் ஹுசைன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவர் வீசிய பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேலே சென்றது. இது ஸ்லிப் இருக்கும் திசையை நோக்கி சென்றது. ஸ்லீப் நின்று கொண்டு இருந்த வீரர்தான் இந்த பந்தை பிடித்து இருக்க வேண்டும். ஆனால் கீப்பிங் செய்து கொண்டு இருந்த ரஹீம் இந்த பந்தை வேகமாக ஓடி சென்று பிடித்தார்.

கொஞ்சம் ஸ்லிப் ஆகி இருந்தால் முஷ்பிகுர் ரஹீம் அருகே இருந்த ஸ்லிப் வீரர் மீது மோதி இருப்பார். இதனால் கோபம் அடைந்த முஷ்பிகுர் ரஹீம் சக வீரரை பார்த்து கோபமாக திட்டினார். அதோடு பந்தை எடுத்துக்கொண்டு அவரை அடிக்க பாய்ந்தார்.

Rahim-Cinemapettai.jpg

Rahim-Cinemapettai.jpg

அந்த சக வீரர் மன்னிப்பு கேட்டும் கூட கோபம் அடங்காத ரஹீம் அவரை திட்டி கொண்டே இருந்தார். இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் வர்ணனையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top