பெங்களூர் நாட்கள் விமர்சனம் – Bangalore Naatkal Review

Bangalore Naatkal Review

கதை 

ஸ்ரீதிவ்யா படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று கனவில் இருக்க, ஜாதகம் மூலம் திருமணம் என்று இடி வந்து விழுகின்றது. இதை தொடர்ந்து இவருக்கு, ராணாவுக்கும் திருமண ஏற்பாடு நடைப்பெறுகின்றது. ஸ்ரீதிவ்யாவின் கசின்ஸ் பாபி, ஆர்யா.

பாபி பெங்களூரில் இன்ஜினியராக பணிபுரிய, இதே ஊரில் பைக் மெக்கானிக்காக ஆர்யா வருகிறார். ராணாவிற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் காதல் இருந்ததால், ஸ்ரீதிவ்யாவுடனான திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

ஆர்யா ரேடியோ ஜாக்கி பார்வதியை காதலிக்கின்றார், பாபி எப்போதும் வாழ்க்கையில் ஒரு கோடு போட்டு அதில் நேராக போய்க்கொண்டு இருப்பவர். இதில் இடையில் ஒரு காதல் தோல்வியை வேறு சுமந்து வருகிறார்.
ஆர்யா காதல் இவரின் வேலையை காரணம் காட்டி பார்வதி மறுக்கிறார்.

இதை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா-ராணா திருமண வாழ்க்கை என்ன ஆனது?, பாபி சிம்ஹா தன் கோட்டை விட்டு வெளியே வந்தாரா?, ஆர்யா தன் கோலில் வெற்றி பெற்று பார்வதியை கரம் பிடித்தாரா? என்பதை ஒரு எமோஷ்னல் ட்ரவலாக கூறியிருக்கிறது இந்த பெங்களூர் நாட்கள்

விமர்சனம் 

படத்தின் காமெடி காட்சிகள், மலையாளத்தில் பார்த்திருந்தாலும் பல இடங்களில் சிரிப்பை வரவைக்கின்றது, அதிலும் குறிப்பாக சரண்யா பொன்வன்னன் பாபியின் அம்மாவாக வந்து அசத்துகிறார்.
படத்தின் இசை மலையாளத்திற்கு இசையமைத்து கோபிசந்தர் தான், பாதி இசை அப்படியே கொடுத்து விட்டார், ஆனாலும் ரசிக்க வைக்கின்றது, ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கின்றது.
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெங்களூர் டேஸ் ஒரு மைல் ஸ்டோன் படம், இதில் ஒப்பிட்டுவதை தவிர்க்க முடியவில்லை, மேலும் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகிறது. கேரளா ரசிகர்களுக்கு ஓகே, நம்மூருக்கு வேகம் வேண்டுமே பாஸ்கர் சார்.

மொத்தத்தில் மலையாளத்தில் பார்க்காதவர்களுக்கு மட்டும் இந்த பெங்களூர் நாட்கள் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்

ரைடிங் : 2.25/5

 

Comments

comments