fbpx
Connect with us

Cinemapettai

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு தடையா?

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு தடையா?

சிம்பு நடிக்கும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது சிம்புவுக்கு மட்டுமல்ல, அந்தப் படத்தை இயக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் கூட உறுதியாக தெரியாது.

சிம்பு படங்களுக்கு ஏற்படும் சோதனைக்கு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் விதிவிலக்கில்லை.
2013 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

சிம்பு தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறி இதற்கு மேல் என்னால் இப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார்.அதனால் ‘தள்ளிப் போகாதே’ பாடலைக் கூட படமாக்க முடியாமல் தவித்தார் கௌதம் மேனன்.

இந்நிலையில், ‘தள்ளிப்போகாதே…’ பாடல் காட்சி இல்லாமலே அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிம்புவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என கோர்ட்டுக்குப் போக இருக்கிறாராம் டி.ராஜேந்தர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top