மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலு மகேந்திராவின் நீண்ட நாள் ஆசை ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஹிட் அடித்து வருகிறது.

சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். முதன்முதலாக நெல்லு என்ற மலையாள படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திற்கே கேரளா மாநிலத்தின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது. தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்தும் பாலுமகேந்திரா அத்துறையில் தனக்கான பாணியை உருவாக்கி கொண்டார். ஒளிப்பதிவாளராக வெற்றி கண்ட பின்னர் இயக்குனராக மாறியவர். இயக்குனராக 1977ல் ‘கோகிலா’ திரைப்படத்தை கன்னட மொழியில் இயக்கினார். தமிழில் முதல் படமான அழியாத கோலங்கள் 1978ல் வெளியாயிற்று.

இந்நிலையில், பாலு மகேந்திராவிற்கு ஒரு ஆசை இருந்துள்ளதாம். நடிகர் சத்யராஜை வைத்து முழு நீள அரசியல் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பது தான் அது. அதற்கு முதற்கட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்றதாம். ஆனால், சில காரணங்களால் அதுவும் தடைப்பட்டு இருக்கிறார். ஆனால், அதற்குள் பாலு மகேந்திரா இறந்து விட்டார். இவரது இயக்கத்தில் சத்யராஜ் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்து வெளியாகிய படம் அமைதி படை. அரசியல்வாதி அமாவாசையாக சத்யராஜின் நடிப்பு இன்று பலரின் லைக் லிஸ்டில் இருப்பதற்கு காரணம் எதும் செயற்கை இல்லாமல் அப்பட்டமான அரசியல்வாதியாக காட்சி அளித்தது தான். இப்படத்தை கே. பாலசந்தர் தயாரித்து இருந்தார். ஒருவேளை பாலு மகேந்திராவின் அரசியல் படம் வெளியாகி இருந்தால் அமைதிப்படை லிஸ்டில் அதுவும் இணைந்திருக்கலாம்.