இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் பரத்- சந்தியா நடித்த காதல் படத்தில் விருச்சகாந்த் என்ற கேரக்டரில் நடித்தவர் பல்லு பாபு.

காதல் படத்திற்கு பிறகு 10 படங்களில் நடித்த போதிலும் அவருக்கு போதிய வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை, படவாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர் இல்லத்திற்கு நடையாய் நடந்தும் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

சென்னையில் தங்கி இருந்த அறைக்கு வாடகை கொடுக்க முடியமால் அடுத்த வேளை சாப்பாட்டிற்காக அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இறந்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அடுத்த வேளை சாப்பாட்டிற்காக சென்னை சூளை கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக கடந்த 17ம் தேதி முதன் முறையாக லைவ்டே வெளியே கொண்டு வந்தது.

இதனையடுத்து இரு வாரங்களுக்கு பிறகு பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் நடிகர் பல்லு பாபுவிற்கு உதவி செய்ய முடிவெடுத்தனர்.

அவரை தேடிப்பிடித்து சாய் தீனா தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர் தற்காலிகமாக தங்குவதற்கு இடம் அளித்துள்ளார்.மேலும் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து கொடுத்துள்ளார்.

மேலும் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மன அழுத்தம் மட்டுமே உள்ளது. நல்ல நண்பர்கள், பட வாய்ப்பு, தூக்கம் கிடைத்தால் நம்மைப்போல் இயல்பான நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஆகையால் சினிமா திரையுலக நண்பர்கள் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இருளில் இருந்த பல்லு பாபு வாழ்வு இனி ஓளிர போகிறது… இவர் நடித்த காதல் படத்தில் காதலித்து வேறு ஒருவரை திருமணம் செய்து நடிகர் பரத்தை சந்தியா விட்டு செல்வதால் மன அழுத்தம் ஏற்பட்ட காணப்படும் பரத்தை சந்தியா கணவர் பரத்தை தனது இல்லத்திற்கே அழைத்துச் செல்வார்.

அதைப்போல் நடிகர் சாய் தீனா படவாய்ப்புகள் இல்லாமல் மனஅழுத்தத்தில் இருந்த பல்லு பாபுவை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து தான் சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோ என அனைவருக்கு புரிய வைத்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் சாய் தீனா குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.28 லட்சம் வரை உதவி செய்துள்ளார். பல்லு பாபு தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.