சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘பலூன்’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தில் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சில் உள்ளது.

ஆனால் அந்த படத்தின் இயக்குனர் தான் மகிழ்ச்சியாக இல்லையென்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார்.’பலூன்’ வெற்றி… தொடர்பாக படத்தின் சில தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிலையில் தான் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.

baloon

பலூன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. இயக்குநர், ஹீரோ, நாயகி, துணை நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என இப்படத்தில் பணியாற்றியவர்கள் என யார் இந்த நஷ்டத்துக்கு காரணமாக இருந்தாலும் அதற்கான விளைவை சந்திக்க வேண்டும்.

அம்மாவசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் நுழையும் சிலர் அதன்பின் காட்டும் மற்றொறு முகத்தை பார்த்து சகித்துக் கொள்ளமுடியாததாக உள்ளது.எனது நேர்மையை நான் மதிக்கிறேன். அதேவேளையில் இந்த நேர்மையால் எனது தொழில் பாதிக்கப்படும் என்றாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

baloon

ஒரு முதலீட்டாளராக எனது பணத்தை இழப்பதன் வேதனை எனக்குத் தெரியும். என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன்.

இத்திரைப்படத்தின் நஷ்டத்துக்கு காரணமானவர்கள் தாமே முன்வந்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.