ஜெய், அஞ்சலி, யோகி பாபு நடிப்பில் உருவான படம் பலூன். இந்தப் படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சென்ற வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் சினிஷ் பட ப்ரோமஷன் நேரத்தில் கூட இயக்குனர் அட்லீயை வம்புக்கிழுத்தார். மேலும் இப்படம் நான் காபி தான் அடித்தேன் என்று வேறு பந்தா பண்ணினார். இந்நிலையில் படத்தின் இயக்குனர் சினிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சயான கருத்தை பதிவிட்டுள்ளார்.

baloon

“ பலூன்  வெற்றி…  தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனால் எனக்கும் மகிழ்ச்சி.   இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த இன்ப தருணத்தை  கொண்டாடும் சூழலில் நான் இல்லை.

சிலரது தேவையற்ற தலையீடு இப்படத்தை  வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளருக்கு நேரடியாக  நஷ்டம் ஏற்பட்டது .

ஒரு  படத்தில்  பொருள் நஷ்டம் ஏற்படும் படி யாரும் செயல் பட கூடாது . இயக்குநர், நாயகர், நாயகி, துணை நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என  யார்  நஷ்டத்துக்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். திரைத்துறை என்பது கடின உழைப்பை செலுத்துவதற்குத் தயாராக உள்ளவர்களுக்கான களம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

baloon

அமாவசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் நுழையும் சிலர் அதன்பின்னர் காட்டும் முகம் சகித்துக் கொள்ளமுடியாததாக உள்ளது. சமீபத்தில் ஒரு  தயாரிப்பாளர்  தனது இழப்பு குறித்து தன் ஆதங்கத்தை கொட்டினார். ஆனால்.. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது இருக்கவே நான் விரும்பிகிறேன்.

எனக்கு நேர்மையாக இறுக்கப்பிடிக்கும். அதேவேளையில் இந்த நேர்மையால் எனது தொழில் பாதிக்கப்படும் என்றாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு முதலீட்டாளராக எனது பணத்தை இழப்பதன் வேதனை எனக்குத் தெரியும். என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன்.

இத்திரைப்படத்தின் நஷ்டத்துக்கு காரணமானவர்கள் தாமே முன்வந்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட வேண்டும். நன்றி! “ என்று  இயக்குநர் சினிஷ் தெரிவித்திருக்கிறார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இவர் சிம்பு உதாரணத்தை எடுத்துள்ளார் எனவே இவர் ஹீரோ ஜெய் அவர்களை தான் மறைமுகமாக சொல்லுகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். வேறு சிலரோ இவர் அன்புச்செழியன் போன்ற கந்து வட்டி விடுபவர்களை தான் சொல்கிறார் என்கின்றனர். தயாரிப்பாளரே வாய் திறக்காத பொழுது,   இவர் வீண் பப்ளிசிட்டி தேடுகிறார்  என்றும் கிசு கிசுகின்றனர். எதோ எப்படியோ வெறும் வாயை மென்ற நம் நெட்டிசன்களுக்கு நொறுக்கு தீனியாக மாறிவிட்டார் இயக்குனர்.