வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

1000 கோடி வசூலை குவிக்க பாலகிருஷ்ணா போட்ட பக்கா பிளான்.. தூசு தட்டிய ஹிட் படத்தின் 2 வது பாகம்!


நண்டமூரி பாலகிருஷ்ணாவின் படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெரும் அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான அகண்டா படமும் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தின் அடுத்தின் அடுத்த பாகம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆண்டுகளாக முன்னணி நடிகர்

தெலுங்கு சினிமாவை சில ஆண்டுகளுக்கு முன் ரசிகர்கள் ட்ரொல் செய்தது எல்லாம் மலையேறிப் போய், டோலிவுட் சினிமாவில் தற்போது தரமான படங்களும், பல கோடி வசூல் குவிக்கும் படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவின் படங்களும் சில ஹிட் வரிசையில் சில ட்ரோல் வரிசையில் நிற்கும்.

ஆனால் அவரது படங்களில் மிகைப்படுத்தப்பட்ட சண்டை காட்சிகள், வசனங்கள் இருப்பதாக கலாய்க்கப்பட்டாலும், அதைத்தாண்டி பாலகிருஷ்ணாவுக்கும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால் முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது படமும் நல்ல ஓபனிங் இருக்கும். கலெக்சனும் அள்ளும். அவருக்கான மாஸ் இன்னும் குறையாத நிலையில் பாலகிருஷ்ணா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதன்படி, கே.எஸ்.ரவீந்திரன் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 109 வது படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. அதேபோல் பாலகிருஷ்ணா நடிப்பில், போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் பிபி4 படமும் விரைவில் வெளியாகவுள்ளது. 64 வயதான பாலகிருஷ்ணா இளம் நடிகர்களுக்கு போட்டியாக டூயட் காட்சிகளில் நடித்து வந்தது குறைந்து தற்போது அவரது வயதுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வசூலை வாரிக் குவித்த அகண்டா

இந்த நிலையில், சிம்ஹா, லெஜண்ட், அகண்டா ஆகிய படங்களில் போயபதி சீனுவுடன் கூட்டணி அமைத்த 3 படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இதே கூட்டணி பிபி 2 என்ற படத்தில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அகண்டா 2 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பாலகிருஷ்ணா நடிப்பில், போயபதி சீனு இயக்கத்தில், ராம்பிரசாத் ஒளிப்பதிவில் வெளியான படம் அகண்டா. இப்படம் அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக அமைந்து, பாலகிருஷ்ணாவின் மார்க்கெட்டை தூக்கிவிட்டது.

அகண்டா 2வது பாகம்

இதையடுத்து, அகண்டா 2 படத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களாலும், பாலகிருஷ்ணாவும், சீனுவும் வேறு படங்களில் பிஷியாக விட்டால் இப்படம் தள்ளிப்போனது. இந்த நிலையில் இப்படத்தின் பூஜை அக்டோபர் 16 ஆம் தேதி ஹைதாராபாத்தில் நடைபெற்றது. இதில் அகண்டாவில் பணியாற்றிய நடிகர்கள், கலைஞர்களே 2 வது பாகத்திலும் பணியாற்றவுள்ளனர். ஆனால் இது, முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது புதிய கதையா? என்பது பற்றி தெரியவில்லை.

இருப்பினும் 2 வது பாகம் என்பதால் அதன் தொடர்ச்சியாக இருந்தால் ரசிகர்களால் காட்சிகளுடன் ஒன்ற முடியும், இது படத்தின் வெற்றிக்கும் கைகொடுக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே பாலகிருஷ்ணாவின் கேரியரில் இப்படமும் வெற்றிப்படமாக அமைந்து வசூல் குவிக்கும் என ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். அகண்டா 2 படம் விரைவில் ஷூட்டிங் தொடங்கி அடுத்தாண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதிலும் பாலகிருஷ்ணா ஆக்சன் அவதாரத்தால் ரசிகர்களை பிரமிக்க வைப்பார் என நெட்டின்சன்கள் கருத்துகள் கூறி வருகின்றனர்



- Advertisement -

Trending News