Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-balaji-murugadass

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டாவடிக்க கேபி! டாஸ்க்-க்கு இன்னொருத்தரா? பாலாஜியின் இரட்டை வேடத்தை நாறடித்த நெட்டிசன்கள்! 

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்  சீசன்4.

தற்போது அந்தவகையில் இந்த ஷோவின் முக்கிய திருப்பமாக அமைந்தது  மொட்ட  பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் செயல்.

அதாவது அடுத்த வார கேப்டன் பதவிக்காக கேப்ரில்லா, ரியோ ராஜ் மற்றும் வேல்முருகன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களை மற்ற போட்டியாளர்கள் எத்தனை பேர் சப்போர்ட் செய்கிறாரோ அவர்களில் ஒருவர்  தலைவராக போட்டியிடும் நபரை தோளில் சுமந்து கொண்டு நிற்க வேண்டும் என்ற போட்டி தொடங்கப்பட்டது.

அதில் கேப்ரியலாவுக்கு மொட்டையை தவிர வேறு யாரும் சப்போர்ட் செய்யவில்லை.எனவே அவரே கேபியை முதுகில் தூக்கிக் கொண்டு   நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் கேப்ரியலாவுக்கு புரோமோவில் காதல் வலையை வீசிக்கொண்டிருந்த பாலாஜி, கேபிக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்தது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் ஷாக்காக இருந்தது..

ஏற்கனவே உடல்நிலை குறைவால் இருந்த சுரேஷின் முதுகில் ஏறி  வெற்றியின் இலக்கை  கைக்கு எட்டும் நிலையில், சுரேஷின் நலன்கருதி  அவருக்கு  கஷ்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் முதுகிலிருந்து  இறங்கிவிட்டார் கேபி.

இதனைத்தொடர்ந்து கண்ணீருடன் சுரேஷிற்கு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்று பாசத்துடன் நன்றி தெரிவித்தார் கேப்ரில்லா.

இந்த நிகழ்ச்சியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் ‘நாமதான் இவ்வளவு நாளா மொட்டய தப்பா நினைச்சுடோமோ’ என்ற சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்துள்ளனர்.

gabriella

gabriella

Continue Reading
To Top