fbpx
Connect with us

ஒதுக்குப் புறமா வச்சு ரொமான்ஸ் செய்த பாலாஜி.. ரத்த கண்ணீர் வடிக்கும் கேப்ரில்லா! ஷாக்கான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒதுக்குப் புறமா வச்சு ரொமான்ஸ் செய்த பாலாஜி.. ரத்த கண்ணீர் வடிக்கும் கேப்ரில்லா! ஷாக்கான ரசிகர்கள்

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் நேற்று நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாலாஜி ஷிவானியின் ரொமான்ஸ்  சீக்வென்ஸ் தான்.

ஏனென்றால் நேற்று பிக் பாஸ் அனைவரிடமும் வண்ணம் தீட்டாத கொலு பொம்மை ஒன்றை கொடுத்து அவற்றுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலையை பார்க்க சொன்னார்.

ஆனால், பாலாஜியோ ஷிவானிய ஓரமா நவத்திட்டு போயி பெயிண்ட் அடிச்சுகிட்டே  ரொமான்ஸ் பண்ணி இருக்காரு. மேலும் ஷிவானியோ சற்றும் சளைக்காமல் பாலாஜியை பாட்டு பாட சொல்லி கேட்க, பாலாஜியும் ஷிவானிகாக ‘ஆல் யூவர் பியூட்டி அழகு கண்ணாடி’ என்ற பாடலைப் பாடி அசத்தினார்.

மேலும் பாலாஜி பாடிக்கொண்டிருக்கும் போது ஷிவானி பாலாஜியை லவ் லுக் விட்டது ஷிவானியின் நாலுமணி போஸ்ட் ஃபேன்ஸ்சை மனமுடைய செய்துள்ளது.

இதை ஓரமாக இருந்து கவனித்த கேப்ரில்லா என்ன நடக்குதுன்னு புரியாமல் குழப்பத்தில் ஷாக்காகிருந்தாங்க.

எனவே, பிக் பாஸ் சீசன் போரில் லவ் ட்ராக் சீக்கிரமாவே ஆரம்பிச்சுடும் என்ற நம்பிக்கையில் தினம் தினமும் இந்த நிகழ்ச்சியை அதிக எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

இந்த நிலையில் பாலாஜி,ஷிவானி இடையே வெகு விரைவில் காதல் மலர அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதால் நாலுமணி போஸ்ட் ஃபேன்ஸ் மனமுடைந்து ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top