fbpx
Connect with us

இன்னும் தாலி மட்டும் தான் கட்டனும் போல! எல்லை மீறும் பயில்வான், ஷிவானி ஜோடி.. நொந்து போன ரசிகர்கள்!

shivani-balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்னும் தாலி மட்டும் தான் கட்டனும் போல! எல்லை மீறும் பயில்வான், ஷிவானி ஜோடி.. நொந்து போன ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸின் நேற்றைய எபிசோட் தாறுமாறாக இருந்தது. ஏனெனில் தங்கவேட்டை டாஸ்க்கில் வெற்றி பெற்ற அர்ச்சனா அண்ட் கோ செய்த செயல்களால் பிக்பாஸ் வீடே களைகட்டியது.

இந்தநிலையில் பாலாஜியும், ஷிவானியும் செய்திருக்கும் காதல் அட்டூழியங்களை பார்த்த ரசிகர்கள் நொந்துபோன நூடுல்ஸ் ஆயிட்டாங்க.

அதாவது இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியையும் பாலாவையும் வச்சுதான் லவ் ட்ராக்க ஓட்டணும்னு நெனச்ச பிக்பாஸ், கொஞ்சம் கொஞ்சமா அத சாதிச்சுட்டு இருக்கிறாரு என்றே சொல்லலாம்.

ஏனென்றால் சனம், கேபி என இருவரும் பாலா பாலா.. என்று வழிந்தாலும், பாலா அதெல்லாம் கண்டுக்கவே இல்லை. மேலும் சனம் செட்டி தோளில் கையை போட்டுக்கொண்டு நடந்து வந்தாலும், ஷிவானி எதிரே வந்ததும் அவரை பாலா லவ் லுக் விட்டதை பார்த்த சனம், ‘அங்க பாக்காத. இங்க பாரு’ என சொல்ல ‘நா இங்க தான் பாக்குறேன்’ என்று பாலா மழுப்பிவிட்டார்.

இதை அடுத்து பாலா அரசனைப் போல படுத்துக்கொண்டு, ஷிவானியை தனக்கு ஊட்டிவிட சொல்ல ஷிவானியும் காதல் ரசம் சொட்ட சொட்ட.. பாலாவிற்கு ஊட்டி விட்டார்.

இதன்பிறகு அரச குடும்பத்தினர் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், இவர்களுடைய ரொமான்ஸ் நிறுத்தபடாமல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

balaji-shivani-1

balaji-shivani-1

இதைப்பார்த்த ஷிவானியின் ஃபேன்ஸ் மனமுடைந்து, ‘தாங்க முடியலப்பா..’ என்று இணையத்தில் நொந்து கொள்கின்றனர்.

shivani-balaji

shivani-balaji

Continue Reading
To Top