Tamil Cinema News | சினிமா செய்திகள்
தோல்வி பயத்தில் ஒரே பிரபலத்தை டார்கெட் செய்யும் ரம்யா, பாலாஜி.. மக்கள் சப்போர்ட் இருக்கும் வரை கெத்துதான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி நாளுக்கு நாள் தன்னுடைய விறுவிறுப்பை அதிகரித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இதற்காக பல யுத்திகளை கையாண்டு வருகிறார் பிக் பாஸ்.
மேலும் பிக்பாஸ் மட்டுமல்லாமல், அவருக்கு இணையாக போட்டியாளர்களும் வெற்றி பெறுவதற்காக களத்தில் குதித்து வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆரி வின்னராய் விடுவாரோ என்ற எண்ணத்தில் பாலாஜியும், ரம்யாவும் அவரை ஓரங்கட்டி வருவது பிக்பாஸ் வீட்டில் தெள்ளத் தெளிவாய் தெரிவதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த சீசனில் கடுமையான போட்டியாளராக இருப்பவர் நடிகர் ஆரி தான். ஏனென்றால் இதுவரை தொடர்ந்து எல்லா முறையும் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் ஆரி இதுவரை எலிமினேட் ஆகவில்லை.
ஏனெனில் ஆரி என்னதான் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தாலும், மக்களிடையே நல்ல பெயரை தான் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆரி டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்பிருப்பதாகவும் இணையத்தில் பரவலாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் பாதி நாட்களுக்கு மேல் முடிவடைந்து விட்டதால் இனிமேல் டப்பான கன்டஸ்டன்ட்களெல்லாம் கடுமையான போட்டியை சந்திப்பது உறுதி.
இதை மனதில் கொண்டு ரம்யாவும் பாலாஜியும் நேற்றைய டாஸ்க்கில் ஆரியைப் பேசவிடாமல், அவரை ஓரம் கட்டுவது போல் செய்தது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
