fbpx
Connect with us

Cinemapettai

எவிக்சன் பிரீ பாஸ்க்காக குள்ளநரியாக மாறிய பாலாஜி முருகதாஸ்.. ஆனாலும் கொண்டாடும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவிக்சன் பிரீ பாஸ்க்காக குள்ளநரியாக மாறிய பாலாஜி முருகதாஸ்.. ஆனாலும் கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரம்மாஸ்திரமான பிக் பாஸ் ஷோ இந்த மாதம் நான்காம் தேதி தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 17வது போட்டியாளராக VJ அர்ச்சனா களமிறக்கப்பட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க ஆஜித்தின் எவிக்சன் பிரீ பாசை பாலாஜி முருகதாஸ் திருடி ஆஜித்தை அலைய வைத்தது அவருடைய ரசிகர்களை  எரிச்சலூட்டியது.

அதாவது நேற்று முன்தினம் நடந்த டாஸ்க் மூலம் எவிக்சன் ஃப்ரீ பாசை வென்றார் ஆஜித். மேலும் அதை அசால்டாக கார்டன் ஏரியாவில் ஒளித்து வைத்தததை கண்ட பாலாஜி முருகதாஸ் ஆஜித்துக்கு பாடம் புகட்டுவதகாக கேமரா முன் சொல்லிவிட்டு அந்தப் பாசை எடுத்து ஒளிய வைத்தார்.

பின்பு ஆஜித் அந்தப் பாசை தேடியபோது அவருடன் சேர்ந்து ஒன்றுமே அறியாதவர் போல் தேடினார் பாலாஜி. இதைப்பற்றிய டிஸ்கஷன் கிச்சன் ஏரியாவில் நடந்துகொண்டிருந்தபோது ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பதை போல் தன்னைத் தானே சிரித்து காட்டிக் கொடுத்துக் கொண்டார் பாலாஜி.

மேலும் இதையடுத்து ஆஜித்திற்கு, ‘இந்த மாதிரி கேர்லஸ்சா பாசை அங்க இங்கன்னு வைக்காத. அது உனக்கு நல்லது இல்ல’ என்று  அட்வைஸ் பண்ணி திருப்பி கொடுத்துவிட்டார் பாலாஜி. இதனால் மீண்டும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

balaji-biggboss

balaji-biggboss

Continue Reading
To Top