Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரியோவை ஊமகுத்து குத்திய பாலாஜி.. வாயடைத்துப்போன பிக்பாஸ் வீடு!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக்பாஸ் 4 வீட்டில் சாக்லேட் பாயாக சுற்றி கொண்டிருப்பவர் தான் பாலாஜி முருகதாஸ்.

இவ்வாறிருக்க பாலாஜி ரியோவை பற்றி பகிர்ந்துள்ள விஷயம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் வாயடைத்துப் போக வைத்துள்ளது.

அதாவது பிக்பாஸ் வீட்டில் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி கெத்தாக சுற்றிக் கொண்டிருப்பவர் தான் பாலாஜி முருகதாஸ்.

அந்தவகையில் நேற்று கமல் கொடுத்த கிரீடம்- கொம்பு டாஸ்கில் ரியோவை பற்றிய உண்மைகளையெல்லாம் புட்டுப்புட்டு வைத்துள்ளார் பாலாஜி.

மேலும் ரியோவை, ‘நாலஞ்சு பேர இந்த பிக் பாஸ் வீட்டில் சேர்த்துக்கிட்டு நீங்க மாஸ் காட்டிட்டு இருக்கீங்க.. உங்களை ஏதாவது சொன்னா நான் மத்தவங்களுக்கும் பதில் சொல்ற நிலைமை இந்த வீட்ல இருக்கு. இப்படி ஒரு டீம் அமைப்பதற்கும் ஒரு திறமை வேணும்.. அந்த திறமைக்காக தான் இந்த கிரீடம்’ என்று  ஊமகுத்தாய் குத்தி இருக்கிறார் பாலாஜி.

இதைக் கேட்ட ரசிகர்கள் ‘பாலாஜி சொல்றதுல நூறு சதவீதம் உண்மை இருக்கிறது’ என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதால் பாலாஜி முருகதாஸ் இந்த சீசனின் வெற்றியாளராக மாற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

balaji-murugadass-bigboss-4

balaji-murugadass-bigboss-4

Continue Reading
To Top