Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பயில்வான் பாலாஜி.. வைரலாகும் குறும்பட வீடியோ
ஒவ்வொரு பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலும் ஒரு ஜோடியை சேர்த்து வைத்து விடுகிறது விஜய் டிவி.
அந்த வகையில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜோடியாக வலம் வருபவர்கள் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி.
எல்லை மீறும் இந்த ஜோடியை பார்த்து ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். சிவானி எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாலாஜியுடன் அந்த வீட்டில் ரொமான்ஸ் செய்து வருகிறார்.
இப்படித்தான் ஆரவ் மற்றும் ஓவியா ஆகிய இருவரும் ரொமான்ஸ் பண்ணி கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள்ளேயே முத்தம் கொடுத்துக் கொண்ட செய்தி வைரல் ஆனது.
தற்போது அதே போல் சம்பவம் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. ஆனால் இதை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப தவறிவிட்டது.
சிவானியுடன் ஆட்டம் போடும் பாலாஜி, சிவானிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி விட்டது. இந்நிலையில் இருவருக்கும் காதல் முற்றிக்கொண்டது என பேச்சுகள் எழுந்தன.
