Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிக்சர் திங்கிறவன், ஊமைக் கோட்டான்லாம் டைட்டில் வின்னரா?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த நான்காவது சீசன் பெரும் சர்ச்சைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் 4 வீட்டில் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது பாலா தான். ஏனென்றால் பிக் பாஸ் 4 ஆரம்பித்த காலத்திலேயே, சனம் ஷெட்டியை தறுதலை என திட்டியது, ஆரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டது, அர்ச்சனாவின் அன்பை விமர்சித்தது என பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

இவ்வாறு பாலா நெட்டிசன்களுக்கு கண்டெண்ட்களை அள்ளி அள்ளித் தருவதால் இன்றுவரை வீட்டைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்கிறார் என்ற கருத்தும் அவ்வப்போது வெளிவருகிறது.இந்த நிலையில், பாலா அனிதாவிடம் முன்னாள் பிக் பாஸ் வெற்றியாளர்களின் வெற்றியை விமர்சிக்கும் விதமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்று பிக் பாஸ் கொடுத்த படு மொக்கையான டாஸ்க்கை முடித்தபிறகு அனிதாவிடம் பேசிய பாலா, ‘இங்கு அமைதியாய் இருப்பவன் ஜெயிக்கலாம் அப்படிங்கிற ஒப்பினியன் மாறணும். ஒக்காந்து வேர்கடலை சாப்பிடறவன் ஜெயிச்சா எப்படி?’ என்று பேசியிருந்தார்.

இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் பாலாஜி, கடந்த சீசன் வின்னரான முகேனை தான் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று கூறுகின்றனர்.

எனவே, இவ்வாறு அடுத்தடுத்த சர்ச்சைகளில் பாலா சிக்குவதால், இவர் பிக்பாஸ் வீட்டில் இனிமேல் இருப்பாரா? வெளியே போவாரா? என்ற சந்தேகம் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Continue Reading
To Top