fbpx
Connect with us

சனம் ஷெட்டிக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பயில்வான் பாலா.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

sanam-balaji-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சனம் ஷெட்டிக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பயில்வான் பாலா.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடு மற்ற எபிசோடுகளை காட்டிலும் சிறந்ததாக விளங்கியது. ஏனெனில் தங்கவேட்டை டாஸ்க்கில் ஜெயித்த அர்ச்சனா அண்ட் கோ செய்த அட்டூழியங்கள் நேற்றைய எபிசோடை பார்த்த அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அந்தவகையில் நேற்று பாலா, சனம் ஷெட்டியை கதற கதற.. வச்சு செய்திருக்கிறார்.

அதாவது அரச குடும்பத்தினரில் ஒருவரான பாலா, அடிமை குடும்பத்தினரில் ஒருவரான சனம் ஷெட்டியை ‘சம்மந்தமில்லாமல் ஆர்க்யூ பண்ண மாட்டேன்’ என்றும், ‘முந்திரிக்கொட்டை மாதிரி முந்த மாட்டேன்’ என்றும் பத்துமுறை சொல்ல சொன்னார்.

மேலும் சனம், முந்திரிக்கொட்டைக்கு அர்த்தம் என்னவென்று தெரியாமல் பாலா சொன்னதை பண்ணிவிட்டு, அதன் அர்த்தம் தெரிந்தபின், கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து அழத் தொடங்கினார்.

இதையடுத்து சனம் பாலாவிடம், ‘நான் உன்ன ரொம்ப நம்பினேன் பாலா.. நீ என்ன ஏமாத்திட்ட’ என்று சண்டை பிடிக்க ஆரம்பித்தார்.

இதற்கு பாலா, ‘நீ என் பிரண்ட் இல்ல.. என் எதிரி’ என்று சனத்தை நல்லா வெறுப்பேற்றி விட்டு, பின்னர் சன்னதிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் சனம் இன்னொரு வாட்டி என ஆசையாக பாலாவிடம் கேட்க, கையெடுத்து கும்பிட்டு போட்டு சாரி சொன்னார் பாலா.

இவ்வாறு சனம், ‘ஷார்ட் பூட் திரின்னா’ என்னனு தெரியல.., ‘முந்திரிக்கொட்டன்னா என்னன்னு தெரியல..’ என்று கூறியதால், ‘அப்போ நீ 22 இல்ல.. 200 படம் நடிச்சா கூட உன்ன யாருக்கும் தெரியாதுமா’ என்று நெட்டிசன்கள் சனத்தை பயங்கரமாக பங்கம் பண்ணி வருகின்றனர்.

balaji-shivani

balaji-shivani

Continue Reading
To Top