கனா காணும் காலங்கள் புகழ் பாலாஜியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்திருக்கும் நகர்வலம் படம் நேற்று வெளியானது. இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் தனது கடந்த கால கஷ்டங்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், ” நான் ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் ஹீரோவாக நடித்தபோது அதில் சிவகார்த்திகேயன் ஒரு கேரக்டருக்கு சான்ஸ் கேட்டு வந்தார். நானும் இயக்குனரிடம் சிபாரிசு செய்தேன். ஆனால் அதற்குள் நடிகர்கள் தேர்வாகிவிட்டனர்.

அதேபோல் நான் நடித்த பட்டாளம் படத்தின் ஆடியோ விழாவில்தான் சிவகார்த்திகேயன் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் இந்த இடைவெளியில் நான் பல கடைகளில் வேலை கேட்டு சென்றேன். ஆனால் சினிமா நடிகர் என்பதால் யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை” என உணர்ச்சிகரமாக பேசினார்.