தெலுங்கிலும் சாதனை படைத்த பாலச்சந்தர்.. 2 வருடம் ஓடி வெற்றி கண்ட திரைப்படம்

தமிழ் திரையுலகில் பல எதார்த்தமான படைப்புகளையும் துணிச்சலான கதாபாத்திரங்களையும் நமக்கு கொடுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். இவர் இயக்கிய அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்ற பல திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் இன்று சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர். அதில் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோருக்கு பாலசந்தர்தான் மானசீக குரு.

அந்த வகையில் இவர் கமலை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அப்படி பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மரோ சரித்ரா. அரங்கண்ணல் தயாரிப்பில் கமல், சரிதா ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது.

அங்கு மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இப்படத்தைக் காண இளைஞர்கள் கூட்டம் கரைபுரண்டது. இப்போதெல்லாம் சில நாட்கள் படம் ஓடினாலே பெரிதாக இருக்கும் போது இந்த படம் கிட்டத்தட்ட 596 நாட்கள் ஓடியது.

இரண்டு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்த இந்த திரைப்படம் ஹிந்தியிலும் வெளியானது. அந்தப் படத்தையும் பாலச்சந்தர் தான் இயக்கி இருந்தார். கமல், ரதி நடித்திருந்த அந்த திரைப்படம் 80 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

கமலின் திரைவாழ்க்கையில் இந்த மரோசரித்திரா திரைப்படம் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவருக்கு ஹிந்தியில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன் மூலம் அவர் வட நாட்டிலும் தன் முத்திரையைப் பதித்து குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -