Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் குரூப்பிஸத்திற்கு எதிராக பாலா எடுத்த சபதம்.. ஆடிப்போன அர்ச்சனா அண்ட் கோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் அனுதினமும் ஏதாவது ஒரு பிரச்சினை வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை குரூப்பிசம் தான். என்னதான் ரியோ குரூப்பில்ல குரூப்பில்ல.. என்று கூவினாலும் ரியோ தான் அதில் முக்கியமான நபராக இருந்து வருகிறார் என்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
இந்த நிலையில் ‘குடும்பமா விளையாடுறாங்க, அத நான் விடமாட்டேன்’ என்று பாலாஜி அர்ச்சனா அண்ட் கோகளுக்கு எதிராக சபதம் எடுத்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
அதாவது அனிதா, பாலாஜி, ஆரி, சனம் ஆகியோர் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள குரூப்பிஸத்தை பற்றி விவாதித்தனர்.
மேலும் அந்த விவாதத்தின் போது ஆரி, ரியோவிற்காக தான் கேப்டன் டாஸ்க் விட்டுக் கொடுத்ததாகவும், அந்த ஐந்து பேருக்காக விளையாடாமல் உனக்காக விளையாடு என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாலா, ‘ரிலேஷன்ஷிப் வச்சு எல்லாரும் பிளாக்மெயில் பண்றாங்க.. இது பிக் பாஸ் கேம் ஷோ, இங்க வந்து குடும்பமா விளையாடலாமுன்னு பாக்குறாங்க, ஆனா அதுக்கு நான் விட மாட்டேன்’ என்று கூறினார்.
எனவே, பாலாஜி இவ்வாறு அர்ச்சனா அண்ட் கோவிற்க்கு எதிராக எடுத்துள்ள சபதம், பிக்பாஸ் வீட்டினுள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
