Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிதாமகன் விக்ரம் போல் பட்டை தீட்டப்படும் ஆர்.கே.சுரேஷ்.. இணையதளத்தை மிரட்டும் கெட்டப்
பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது பாலா படத்தில் கதாநாயகனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போது உறுதியாகிவிட்டது, என்னவென்றால் பாலா படம் என்றாலே அந்த கதாபாத்திரமாகவே மாறவேண்டும் என்பதுதான்.
இது சூர்யா மற்றும் விக்ரமுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது பாலா, ஆர்.கே. சுரேஷ் வைத்து படம் எடுக்க உள்ளதால் தன் உடல் எடையை 93 கிலோ கூட்டி உள்ளாராம்.
கோலிவுட்டில் இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பார். அந்த படத்தில் நல்ல பெயர் வாங்கிய ஆர்.கே சுரேஷ்க்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது.
rk-suresh-1
விஷால் நடிப்பில் வெளிவந்த மருது படத்தில் ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மிகத் தரமாக நடித்திருப்பார். தற்போது இவர் பிதாமகன் விக்ரமை போல் மாறி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது பாலா பிதாமகன் 2 எடுக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
rk-suresh-2
தரமான சம்பவம் இருக்கு!!