புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொங்கலுக்கு மொத்த கரும்பையும் சுவைக்க வரும் காட்டு யானை.. பாகனுக்கே சவால் விட்டு களமிறங்கும் பாலா

2024 தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பல படங்கள் பொங்கலுக்கு வரிசை கட்டி நின்றது. ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதால் சில படங்கள், நமக்கு ஏன் வம்பு என தலை தெரிக்க ஓடியது. இப்பொழுது ஏற்கனவே லிஸ்டில் இருந்த படங்கள் கூட ஒரு படத்திற்கு அஞ்சி ரேசிலிருந்து விலகி உள்ளது.

தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா, அஜித்தின் விடாமுயற்சி, ரெட்டை தல, இந்தியன் 3 என பல படங்கள் பொங்கல் ரிலீசாக வரிசை கட்டி நின்றது. ஆனால் இப்பொழுது இந்த படங்கள் எல்லாம் பின்வாங்கியுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “வீரதீர சூரன் பாகம்” 2 படமும் பொங்கலுக்கு வெளியாக காத்துக் கொண்டிருந்தது. இந்த படத்தை விக்ரம் பெரிதும் நம்பி இருந்தார். ஆரம்பத்தில் ரிலீஸுக்காக பல ஏற்பாடுகளை செய்த போதிலும் இப்பொழுது அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டனர். இது ஒரு புறம் இருக்க டிசம்பர் 20ஆம் தேதியை பல படங்கள் குறி வைத்துள்ளது.

பொங்கலுக்கு பெரிய படங்கள் வருவதால் டிசம்பர் 20ஆம் தேதி பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக ஜெயம் ரவியின் காத்திருக்க நேரமில்லை, தனுஷின் குபேரா, வெற்றிமாறனின் விடுதலை 2 போன்ற படங்கள் ரிலீசாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் புஷ்பா 2 படமும் டிசம்பர் மாதத்தில் வருகிறது.

இப்படி சலசலப்பு போய்க்கொண்டிருக்கும் போது சங்கர் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வருவதால் நமக்கு ஏன் வம்பு என மொத்த படமும் பின் வாங்கியுள்ளது. ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது மாதிரி எல்லா படங்களும் பின்வாங்கியது. ஆனால் பாகனுக்கே சவால் விடும் விதமாக வெற்றிமாறன் தனது வணங்கான் படத்தை வெளியிடுகிறார்.

- Advertisement -

Trending News