ஆர்யாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது வருத்தம்.. காரணத்தைக் ஓப்பனாக கூறிய பாலா.!

தமிழ் சினிமாவில் மிரட்டலான கதை, வித்தியாசமான கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரம் என்று கதைக்குள் புதுமையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா இயக்குனராக தனது பயணத்தை சேது திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.

இதில் நடிகர் விக்ரமின் நடிப்பு சிறந்த வரவேற்பைப் பெற்று இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து அவர் இயக்கிய நந்தா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த பிதாமகன் திரைப்படம் மேலும் ஒரு பரிமாணத்தை மக்களுக்கு காட்டியது. நடிகர் விக்ரம் இத்திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றார். பிரிட்டிஷ் காலத்தில் தேயிலை தோட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் கொடுமைகளை பற்றிய கதைக்களம் தான் பரதேசி திரைப்படத்தில் அதர்வா மற்றும் வேதிகா இணைந்து நடித்தனர்.

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவான நான் கடவுள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை பாலா பெற்றார். இயக்குனர் பாலா இத்திரைப்படத்தினை பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், நடிகர் ஆர்யா இந்தப் படத்தில் ஒரு அகோரியாக நடித்திருப்பார்.

மேலும் ஒரு காட்சியில் தலைகீழாக யோகாசனம் செய்திருப்பார் அந்த யோகாவை செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும். ஆனால் ஆர்யா வெறும் 6 நாட்களில் அதை கற்றுக் கொண்டு சிறப்பாக நடித்தார். நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வமே இதற்கு காரணம் என்று பாராட்டியுள்ளார்.

bala-naan-kadavul
bala-naan-kadavul

இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது வருத்தமான ஒரு விஷயம் என்று இயக்குனர் பாலா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த சார்பாட்டா திரைப்படம் அவருடைய நடிப்பு திறமைக்கு மேலும் ஒரு  எடுத்துக்காட்டாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்