தம்பிகளா, அடுத்த படம் உங்கள வச்சு தான், கிளம்பி வாங்க.. மூன்று நடிகர்களுக்கு அழைப்பு விடுத்த பாலா

முன்னரெல்லாம் பாலா என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பாலா என்ற பெயரை கேட்டாலே ரசிகர்கள் பரிதாபமாக பார்க்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் அந்த வர்மா திரைப்படம் தான்.

சொந்த கதையில் நல்ல படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பாலாவை ரீமேக் படம் எடுக்க சொல்லி அவரது மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்துவிட்டனர் விக்ரம் குடும்பத்தினர். அதன்காரணமாக தற்போது பாலா தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்தவர்களின் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக ரசிகர்களை சோதிக்கும் வகையில் அமைந்ததால் முன்னணி இயக்குனர்கள் என்ற இடத்தை இழந்துவிடும் பயத்தில் பலர் கோலிவுட்டில் வலம் வருகிறார்களாம்.

அதில் பாலாவும் ஒருவர். இதன் காரணமாக பாலா தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படங்களான நந்தா, பிதாமகன் போன்ற படங்களைப் போல சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்படி பொறுமையாக எழுதி வருகிறாராம்.

மேலும் இந்த முறை multi-starrer படமெடுக்க செய்து வருகிறார். அந்தவகையில் நடிகர் விஷால், ஆர்யா, அதர்வா போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இவர்களும் பாலா படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

bala-cinemapettai-01
bala-cinemapettai-01

மேற்கண்ட நடிகர்களுடன் பாலா ஏற்கனவே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் இந்த படத்தின் மீது தானாகவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தன்னுடைய முன்னணி இயக்குனர் என்ற பட்டத்தை பாலா தக்கவைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News