Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடக்கும் பாலா படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிங்கம் களம் இறங்கிடுச்சே!
என்ன தான் பாலா படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் அவரது படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு முறையும் இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடைசியாக ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக ஓரளவு சுமாரான வெற்றியே பெற்றது.
இதனையடுத்து பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் வர்மா. தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை வெற்றி நாயகனாக அறிமுகப்படுத்திய பாலா தான் தன்னுடைய மகனையும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசை ஆசையாய் விக்ரம் பாலாவுக்கு அந்த பட வாய்ப்பைக் கொடுத்தார். ரீமேக்குகளில் பெரிதும் ஆர்வம் காட்டாத பாலா விக்ரமுக்காக அந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.
முழு படமும் தயாரான நிலையில் விக்ரமுக்கு அந்தப்படம் சரியாக வரவில்லை என மனதிற்கு தோன்றியுள்ளது. இதனால் உடனடியாக வேறு ஒரு இயக்குனரை வைத்து அந்த படத்தை இயக்கி ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியிட்டு தோல்வியையும் வாங்கிக் கொண்டார்.
அர்ஜுன் ரெட்டி படம் முழுக்க முழுக்க போதை சம்பந்தப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதை பற்றிய படங்களை எடுப்பதற்கு பாலாவை தவிர வேறு எந்த இயக்குனர் சிறப்பானவர் என்பது தெரியவில்லை.
பாலா இயக்கிய வர்மா படத்தின் டீசர் வெளியான போது ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் வர்மா படத்தை அமேசான் தளத்தில் வருகின்ற ஆயுத பூஜை சிறப்பாக வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
