Connect with us
Cinemapettai

Cinemapettai

siva-bala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதிர்பாராத நேரத்தில் பாலாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்.. குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கமர்ஷியல் வட்டாரங்களிலிருந்து வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் பாலா.

சமீபகாலமாக தோல்வி படங்கள் கொடுத்தாலும் பாலா படத்திற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர் இயக்கத்தில் வர்மா என்ற படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அதேபோல் சினிமாவுக்கு வந்த குறைந்த வருடங்களிலேயே சூப்பர் சூப்பர் வெற்றிப் படங்களாக கொடுத்து வெகுவிரைவில் முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கமர்சியல் ஹீரோவான சிவகார்த்திகேயன் வித்தியாசமான படங்கள் இயக்கும் பாலாவுடன் எப்படி கூட்டு சேர்ந்தார் என சினிமா உலகமே ஆச்சரியத்தில் உள்ளது.

அது ஒன்றும் அல்ல. பாலா தயாரிப்பில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பப்ளிசிட்டிக்காக பாலா சிவகார்த்திகேயனுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி பாலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் போன்றவற்றை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளாராம்.

அதற்குள் சிவகார்த்திகேயன் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல்கள் தவறாக பரவிக் கொண்டிருக்கின்றன.

Continue Reading
To Top