Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவின் வர்மா எப்படி இருக்கு? நல்லவேளை தியேட்டரில் வரல, சினிமாபேட்டை விமர்சனம்
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா. முதன்முதலில் இந்த படத்தை பாலா தான் இயக்கினார்.
ஆனால் விக்ரம் மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த படத்தை அப்படியே கைவிட்டு, வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்தார் விக்ரம்.
அது ஒருபுறம் இருக்கட்டும். பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

varma-cinemapettai
படத்தின் கதைச்சுருக்கம்
ஏற்கனவே ஆதித்யா வர்மா படம் வெளியானதால் கதையைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை.
பாலாவின் இயக்கம் எப்படி?
பாலா இயக்கியதிலேயே மிகவும் மோசமான படம் என்று இதைச் சொல்லலாம். ரீமேக் படத்தை சொந்தப்படம் போல் எடுத்தது தான் இதன் சொதப்பலுக்கு முதல் காரணம்.
கதாபாத்திரத்தின் புரிதல் இல்லாமல் படம் முழுக்க சொதப்பி வைத்துள்ளார் பாலா. துரு விக்ரமிடம் நடிப்பை வாங்குகிறேன் என அவரை படாதபாடு படுத்திவிட்டார் போல.
ஒரு சில காட்சிகளில் எதுக்கு நடிக்கிறோம் என்று தெரியாமலேயே நடித்துள்ளார் துரு விக்ரம். மேலும் மேகா சவுத்ரி என்ற அறிமுக நடிகையை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் பாலா.
துருவ் விக்ரம் மற்றும் மேகா சவுத்ரி ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை. பாலா இயக்கத்தில் உருப்படியான விஷயம் ஈஸ்வரி ராவ் கதாபாத்திரம் தான்.
ரீமேக் படத்தில் பாலா தானாகவே இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ராதன் என்பவர் தான் வர்மா படத்திற்கும் இசை.
ஆனால் பின்னணி இசை ஒரு துளிகூட ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை. பாடல்களும் படு குப்பை. நல்லவேளை படத்தை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முடித்தார்கள்.
பாலா இயக்கத்தில் இப்படி ஒரு மோசமான படத்தை இதுவரை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் என்பது போலத்தான் இருக்கிறது வர்மா.
இதுவரை வருமா வருமா என்று கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள், இதற்கு வராமலேயே இருந்துருக்கலாம் என்கிற அளவுக்கு படம் இருக்கிறது.
சினிமாபேட்டை ரேட்டிங்:- 1.5/5.
