புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தேசிய விருது நடிகருக்கு ஏற்பட்ட சோகம்.. 10 ரூபாய் கூட இல்லாமல் பாலாவிடம் கடன் வாங்கிய சம்பவம்

கீழ் சொக்கலிங்க பாகவதர் இவர் பெயரை சொன்னால் கண்டிப்பாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை புகைப்படத்தை பார்த்தால் இவர்தானா என்று சொல்லும் அளவிற்கு முகம் பரிச்சயமானவர். இவர் 1907இல் பிறந்து 2002இல் இறைவனடி சேர்ந்தார். இவர் பழம்பெரும் நாடக கலைஞர் நாடகத்தில் பாடியும் நடித்து புகழ் பெற்றவர். சதிலீலாவதி, ஜென்டில்மேன், இந்தியன் போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர்.

இவர் ரம்பையின் காதல் என்ற நாடகத்தின் மூலம் தங்கப்பதக்கம் வென்றார். இவர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக் கூடியவர். இவர் குரல் இனிமையை கேட்டு பல வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன. இவர் மதுரை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் நாடகத்தை நடத்தி கடைசியாக 1922 இல் சென்னை வந்து சேர்ந்தார்.

இவருடன் ஒன்றாக நடித்த தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா எம்ஜிஆர் போன்றவர்கள். இவர் நடிப்பை பார்த்து இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களில் நடிக்க வைத்து அவருக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தார். இவர் அதற்கு அடுத்து பல படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்று கடைசியாக இந்தியன் படத்தில் நடித்தார்.

இவர் சந்தியாராகம் என்ற படத்தில் தேசிய விருது பெற்ற பொழுது இவருக்கு கௌரவமாக ஒரு விழா அமைத்து இவருக்கு பெருமை சேர்க்கப்பட்டது. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட இவர் சந்தியாராகம் என்ற விழாவின் முடிவில் போக்குவரத்து அதாவது ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் பத்து ரூபாய் கூட இல்லாமல் அப்பொழுது பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த பாலாவிடம் தம்பி எனக்கு ஊருக்கு போக பணம் வேண்டும் ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்று கேட்டுள்ளார் தேசிய விருது நடிகர்.

பாலா தனது கையில் இல்லை சற்று பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அவருக்கு தெரிந்த நபர்களிடம் நண்பரிடம் 30 ரூபாய் பெற்று அவரிடம் கொடுத்துள்ளார். இந்த செய்தி எதற்காக சொல்ல வேண்டுமென்றால் பாலுமகேந்திரா படத்திற்கு தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் பத்து ரூபாய் இல்லாமல் இருக்கும் அளவிற்கு கஷ்டப்பட்டு உள்ளார்.

sokkalingam
sokkalingam

ஆனால் இன்று தேசிய விருது பெற்ற நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தேசியவிருது, நல்ல நடிகர் என்ற பெருமிதம் தாண்டி எப்படி பட்டவருக்கு இந்த பணம் சேருகிறது என்று சினிமா உணர்த்துகிறது.

- Advertisement -

Trending News