fbpx
Connect with us

பாலாவின் வர்மா படம் செம்மையா இருந்துச்சு.. OTT தளத்தில் வரும்போது அவர் மாஸ் தெரியும் என்ற பிரபலம்

varma-bala-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலாவின் வர்மா படம் செம்மையா இருந்துச்சு.. OTT தளத்தில் வரும்போது அவர் மாஸ் தெரியும் என்ற பிரபலம்

சமீபகாலமாக பாலா என்றால் பஞ்சாயத்து என ஆகிவிட்டது. தன்னுடைய இஷ்டத்திற்கு தான் படம் எடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தை சுவாரஸ்யமாக ரசிக்க வைப்பதிலும் கை தேர்ந்தவர்.

முதல் முறையாக தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான விக்ரம் சிபாரிசு செய்ததால் அவருடைய மகன் துருவ் விக்ரமை வைத்து தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் பாலா.

ஆனால் விக்ரமுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக பாலா வர்மா படத்தை இயக்குவதில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்திருந்தார். மீண்டும் விக்ரம் அந்த படத்தை வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிலீஸ் செய்தார்.

ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. துரு விக்ரமின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் பெரிதாக சொல்லவில்லை. இந்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பார்க்கும் விதமாக பாலா இயக்கிய வர்மா படத்தை பார்த்த ஆர்கே சுரேஷ் என்பவர் அந்த படத்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இருந்தது எனவும் சுட்டிக்காட்டினார். படம் மட்டும் வெளியாகியிருந்தால் துருவுக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கும் எனவும், அநியாயமா அதை அவர் கெடுத்துக் கொண்டார் எனவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தை OTT தளங்களில் வெளியிடுவதற்கான வேலைகளில் அந்த படத்தின் தயாரிப்பாளர் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Continue Reading
To Top