இந்தியளவில் திரும்பி பார்க்க வைத்த பாலாவின் 5 படங்கள்.. இவர் இல்லனா விக்ரம் சூர்யா இல்ல

தேசிய அளவில் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் சேது படத்தை இயக்கினார். நடிகர் நடிகையின் நடிப்பு திறனை தோண்டி எடுத்த திரையில் பிரதிபலிக்கச் செய்யும் அசாத்திய படைப்பாளி தான் பாலா.

சேது: 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சேது. விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் காதலின் வலியும், ஆழத்தையும் மிகவும் எதார்த்தமாக சொல்லியிருப்பார் பாலா. மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

sethu vikram
sethu vikram

நந்தா: யுவன் சங்கர் ராஜா இசையில், 2001 இல் வெளிவந்த திரைப்படம் நந்தா. சூர்யா,லைலா, ராஜ்கிரன்,கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். அகதிகள் முகாம் பற்றியும், சீர்திருத்த பள்ளிகளில் வளர்ந்தவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் விளக்கியது. இத்திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

பிதாமகன்: 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடித்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.இப்படத்தின் தயாரிப்பாளர் வி ஏ துரை. ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பிதாமகன். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் பாலாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

நான் கடவுள்: 2009 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் உரையாடல்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். இப்படத்திற்கு இசை இளையராஜா. ஆர்யா இப்படத்தில் ருத்ரன் கதாபாத்திரத்தில் அகோரியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலா பெற்றார்.

அவன் இவன்: 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் ஆர்யா, விஷால், ஜனனி அய்யர், மதுஷாலினி, ஜிஎம் குமார், அம்பிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை வசனம் எஸ் ராமகிருஷ்ணன். இப்படத்தில் ஆர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜிஎம் குமாரின் ஐனஸ் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

- Advertisement -spot_img

Trending News