ஹிட் இயக்குனர்கள் வரிசையில் சேராத பாலா.. இன்று வரை கிடைக்காத அங்கீகாரம்

சேது திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பாலா அதைத்தொடர்ந்து நந்தா, பிதாமகன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரின் படங்களுக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

பொதுவாக பாலா படங்கள் என்றாலே எப்பொழுதும் ஒரு அழுத்தமான திரை கதை நிச்சயம் இருக்கும். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சிகள் சோக கீதங்கள் மட்டுமே தான் பாடும். அதைப் பார்த்த மக்கள் கனத்த மனதுடன் தான் தியேட்டரை விட்டு வெளியில் வருவார்கள்.

அந்த அளவுக்கு அவருடைய படங்கள் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தையும், சோக உணர்வையும் ஏற்படுத்தி விடும். மேலும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் எப்போதும் உண்டு. ஆனாலும் பாலா இதுவரை ஹிட் இயக்குனர் வரிசையில் இடம்பெறவில்லை.

இளம் இயக்குனர்கள் பலரும் அறிமுக படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் பாலா இத்தனை வருட திரை வாழ்வில் கணிசமான படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.

இதுவும் அவர் ஹிட் இயக்குனர் வரிசையில் இடம்பெறாததற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இவர் படங்கள் நல்லா இருக்கும். ஆனால் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்டில் வருவது சந்தேகம்தான். மல்டிபிளக்ஸ் எனப்படும் தியேட்டர்களில் மட்டுமே பாலா படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனால் ஏ பி சி சென்டர்களில் இதுவரை இவர் படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதது மிகப் பெரிய வருத்தம். ஆனாலும் பாலா அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தனக்கு பிடித்த மாதிரியான கதைகளை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்