Connect with us
Cinemapettai

Cinemapettai

bala-heroin

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3வது முறையாக பாலாவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்.. வேற லெவல் கூட்டணி

ஒரு சில இயக்குனர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக செல்வதை காணமுடிகிறது. அந்த வகையில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நம்ம பாலா. இவரது படங்களில் எப்போதுமே ஒரு விதமான புதுமை இருக்கும்.

இருந்தாலும் பாலா படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறும் அளவுக்கு வசூல் ரீதியாக இல்லை என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. பாலா ஒரு கமர்சியல் வெற்றி கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது.

கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படம் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடித்தாலும் வசூல் ரீதியாக சுமார்தான். இதனால் வசூல் ரீதியாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பாலா.

அந்த வகையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் பாலா. இதில் ஹீரோவாக அதர்வா மற்றும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளராக இளையராஜாவின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் சூர்யாதான் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். ஏற்கனவே நந்தா மற்றும் அவன் இவன் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளதால் பாலாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

நந்தா மற்றும் அவன் இவன் படங்களில் இடம் பெற்ற பாடல்களின் வெற்றி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆகையால் இந்த முறையும் இந்த கூட்டணி ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

bala-yuvan-shankar-raja-cinemapettai

bala-yuvan-shankar-raja-cinemapettai

Continue Reading
To Top