fbpx
Connect with us

Cinemapettai

இளையராஜாவுக்கு இருந்த தலக்கணம் தான் பாக்யராஜுக்கு கோபத்தை உண்டாக்கியதாம்.. 35 வருட சண்டையாமே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு இருந்த தலக்கணம் தான் பாக்யராஜுக்கு கோபத்தை உண்டாக்கியதாம்.. 35 வருட சண்டையாமே!

தமிழ் சினிமாவில் சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர் என்றால் அனைவரும் கை காட்டுவது இயக்குனர் பாக்யராஜ் தான். தன்னுடைய திறமையால் இந்தியா முழுவதும் உள்ள சினிமாவை ஆண்டார்.

எண்பது தொண்ணூறுகளில் பாக்யராஜ் படம் என்றாலே தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்றார்கள் மக்கள். அந்தளவு தன்னுடைய படங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்தார்.

அப்படி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய படங்களில் பாக்கியராஜ் இயக்கி நடித்த சின்ன வீடு படத்திற்கு தனி இடம் உண்டு. அந்த படத்திற்கு இசை இளையராஜாதான். இன்றும் அந்த படத்தின் பிஜிஎம் ஒன்று செம ஃபேமஸ்.

அந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அவருடன் சண்டையில் இருந்துள்ளார் பாக்கியராஜ். ஒருமுறை படத்தின் கதை விவாதத்திற்கு சென்றபோது பாக்கியராஜை அலைக்களித்துள்ளார்.

அன்றைய தேதியில் இளையராஜா எந்த அளவு உச்சியில் இருந்தாரோ அதே அளவுக்கு பாக்கியராஜ் இயக்குனர்களில் உச்சியில் இருந்தார். படத்தை பற்றி இளையராஜாவிடம் பேச செல்லும்போதெல்லாம் ஒருவிதமான தலைக்கனத்தை கையாண்டாராம்.

அதேபோல் ஒரு படத்தின் பாடல் பதிவுக்கு சென்ற போது முதலில் ஸ்டூடியோவில் வந்து பார்க்கச் சொன்னாராம். பிறகு சிலநாள் கழித்து வீட்டிற்கு வரச் சொன்னாராம். இதனால் கடுப்பான பாக்கியராஜ், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சொல்லுங்கள் வீட்டிற்கு போய் பார்க்கிறேன்.

அதை விட்டுவிட்டு நினைத்த இடத்திற்கெல்லாம் போய்ப் பார்க்க முடியாது என்று கோபமாக கிளம்பி விட்டாராம். அதன் பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ராசுக்குட்டி படத்தின் போதுதான் ஒன்று சேர்ந்தார்களாம்.

அப்போதுகூட தயாரிப்பாளரின் வேண்டுதல்படிதான் இளையராஜாவுடன் மீண்டும் இணைந்தாராம். இதனால் அப்போது சினிமா வட்டாரங்களில் இளையராஜா தலைக்கணம் பிடித்தவர் என பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியது. இன்றும் இளையராஜாவின் குணத்தை பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

Continue Reading
To Top