fbpx
Connect with us

Cinemapettai

14 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக வரும் இயக்குனர் பாக்யராஜ் மகள்.. அதுவும் இந்த மாதிரி கதையில்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

14 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக வரும் இயக்குனர் பாக்யராஜ் மகள்.. அதுவும் இந்த மாதிரி கதையில்!

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கதாசிரியர் என பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ்நாட்டில் பெண் ரசிகர்கள் கவர்ந்தவர்.

பாக்கியராஜ் சினிமா கேரியரில் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது பாக்கியராஜ் வாரிசுகளான சாந்தனு மற்றும் சரண்யா ஆகியோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் நடிப்பில் உருவான பாரிஜாதம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாக்கியராஜ் மகள் சரண்யா.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது வெளிநாட்டில் உள்ளார். பாக்யராஜ் மகன் காதல் தோல்வியால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நாயகியாக களமிறங்க உள்ளாராம் சரண்யா. காமெடி கலந்த அரசியல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

பாரிஜாதம் படத்தில் இவருடைய துறு துறு நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு தானாகவே சினிமாவை விட்டு ஒதுங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top