கின்னஸ் ரெக்கார்டு வாங்க தயாரான இனியா.. ஈஸ்வரி பேச்சைக் கேட்டு பாக்கியா எடுத்த முடிவு, சந்தோஷத்தில் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், யாரையாவது ஒருத்தர குடிகாரராக காட்ட வேண்டும் என்பதற்காக கோபியை திருத்தி விட்டு செழியன் குடிக்க ஆரம்பித்து விடுகிறார். அதிலும் ஆபீஸ் பிரச்சினை வீட்டு பிரச்சனை என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு சூழலில் மாட்டிக் கொண்டு செழியன் புலம்புகிறார். இதை தட்டி கேட்ட பாக்யாவிடம் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் குடித்து விட்டேன் என்று சொல்கிறார்.

உடனே பாக்யா அப்படி உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு ஆபீஸிலும் வேலை போகிற அளவுக்கு பிரச்சினை இருக்கிறது. வீட்டிலும் தாத்தா இல்லை என்பதால் எல்லா பொறுப்பையும் என் தலையில் விழுந்து விட்டது. தற்போது நான் வீட்டை பார்ப்பன ஆபீஸை பார்ப்பன என்ற குழப்பத்தில் இருக்கிறேன். தாத்தாவும் இல்லை எழிலும் இல்லை, நான் தனி ஆளாக இருந்து எப்படி சமாளிப்பேன் என்று பயம் இருக்கிறது என சொல்கிறார்.

ஒரே டீம் ஆக மாறிய பாக்யாவின் வாரிசுகள்

இதை கேட்ட பாக்யா, தாத்தா இறந்த பிறகு அப்படி என்ன நீ பாரத்தை சுமந்து விட்டாய். உன்னுடைய பொறுப்பில் நான் எதையாவது கொடுத்து பாரு என்று சொன்னேனா? நீ வீட்டுக்கும் குடும்பத்துக்கும் எதுவும் பண்ண வேண்டாம். ஜெனியையும் உன்னுடைய குழந்தைகளை மட்டும் நீ பார்த்துக் கொண்டு சந்தோசமாக இருந்தால் அதுவே எனக்கு போதும்.

குடும்பத்தை எப்படி சமாளிக்கணும், என்ன பண்ணனும் என்று எனக்கு தெரியும். அந்த கவலை உனக்கு வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து இனியா காலேஜில் கலந்து கொண்ட டான்ஸ் போட்டியில் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகி இருக்கிறார். இதனால் தொடர்ந்து இரண்டு மாதங்களில் கலந்து கொண்டு ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற வேண்டும்.

இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி பெர்மிஷன் கேட்க வேண்டும் என்று முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் பாக்கியா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதார்த்தமாக பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது இனியா டான்ஸ் போட்டியையும் அதில் தேர்வாகி இருப்பதையும் பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.

உடனே ஜெனி மற்றும் செழியன் சூப்பர் சந்தோசம் என்று இனியாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு என்று சொல்லப் போகிறார். இதைக் கேட்ட பாக்யாவும் அத்தை சொல்வது சரிதான் என்ற முடிவில் இனியாவிற்கு முட்டுக்கட்டை போட்டு விடுவார்.

ஆனால் இனியாவிற்கு எப்படியாவது இந்த டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கோபியை சந்தித்து அதற்கு பெர்மிஷன் வாங்கி விடுகிறார். பிறகு எதற்கு கோபியை பார்க்க போன என்று ஈஸ்வரி கேட்கும் நிலையில் பாட்டி என்று கூட பாராமல் எதிர்த்து பேசி பாக்யாவுக்கு பதிலடி கொடுத்து விடுகிறார். இனியவை பொறுத்தவரை இந்த டான்ஸ் போட்டியில் கலந்துகொண்டு காலேஜில் எடுத்த கெட்ட பெயரை சரி செய்து கின்னஸ் சாதனை பெற வேண்டும் என்று ஒரு நினைப்பு.

அதனால் வீட்டில் இருப்பவர்களை எதிர்த்து கூட நான் ஜெயித்துக் காட்டுவேன் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார். அத்துடன் இனியா எடுத்த இந்த முடிவுக்கு எழில், செழியன் மற்றும் கோபி என்று ஒரு டீமாக சப்போர்ட் பண்ணுவதால் அடுத்தடுத்து பாக்கியா எல்லா விஷயங்களிலும் தனியாக நிற்பது போல் உணர போகிறார். இதை பார்த்த கோபி இந்த ஒரு தருணத்துக்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்பதற்கு ஏற்ப சந்தோஷப்பட்டு கொள்வார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News