புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாக்கியாவின் பிள்ளைகள் மக்கு என நிரூபித்த வாரிசுகள்.. இஷ்டத்துக்கு ஆட்டம் போட்ட கோபிக்கு வச்ச செக்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தான் எல்லா திருட்டு வேலையும் பண்ணி இருக்கிறார் என்று பாக்யாவுக்கு தெரிந்ததும் நேரா கோபி வீட்டிற்கு போய் பாக்யா மொத்த கோபத்தையும் காட்டி சவால் விட்டுவிட்டார். இதனை பார்த்த ராதிகா, கோபியை திட்டி சைக்கோ தனமாக நடந்து கொள்ளாதீர்கள். அவங்கள பற்றி யோசித்து எங்கள யோசிக்க மறந்து விட்டீங்க.

தேவையில்லாத பிரச்சினை பண்ணி நீங்க சிக்கலில் மாட்டிக் கொண்டால் நாங்கள் என்ன பண்ணுவது என்று ராதிகா கோபத்தில் கோபியை பிடித்து திட்டுகிறார். இதற்கிடையில் ராதிகாவின் அம்மா, கோபி செய்தது தான் சரி என்பதற்கு ஏற்ப கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். அடுத்ததாக எழில், பாக்யாவை பார்த்து பேசுவதற்காக ஹோட்டலுக்கு வருகிறார்.

எழில் வந்ததும் செல்வி பாக்கியவை பட பூஜைக்கு வேண்டாம் என்று சொன்ன காரணத்தை ஞாபகம் வைத்து பேசாமல் போய்விடுகிறார். பிறகு ஈஸ்வரி, உங்க அம்மா செய்தது தப்பு தான். ஆனால் அதற்காக கோபத்தில் இருக்காத. இங்க ஹோட்டலில் வேலை இருப்பதால்தான் உன்னுடைய பட பூஜைக்கு வராமல் போய்விட்டார். பாவம் பாக்யாவை தவறாக நினைக்காதே என்று ஈஸ்வரி, எழிலிடம் எடுத்துச் சொல்கிறார்.

ஆனால் எழில் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலும் என்ன உண்மை என்ன நடந்தது என்ற விஷயத்தை போட்டு உடைத்தால் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்று ஈஸ்வரிக்கும் தெரியும். இனியா மற்றும் செழியனும் பாக்யாவை புரிந்து கொண்டு கோபியை வெறுப்பதற்கு ஒரு நல்ல காரணமாகவும் அமையும். ஆனால் இந்த எழில் எதையும் வெளியே சொல்லாமல் அமைதியாக இருப்பதால் அனைவரும் சேர்ந்து பாக்யாவை தவறாக புரிந்து கொண்டார்கள்.

பாக்யாவின் பிள்ளைகள் மக்கு என்பதை நிரூபிக்கும் விதமாக எழில், செழியன் மற்றும் இனியா மூன்று பேருமே சுயநலவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இருந்தபோதிலும் ஈஸ்வரி, பிரியாணியில் கெட்டுப்போன கறியை கலப்படம் செய்தது கோபி தான் என்ற உண்மையை எழிலிடம் சொல்கிறார். இதை கேட்டதும் எழில், கோபத்தில் கோபி ஹோட்டலுக்கு சென்று கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி திட்டி விட்டார்.

ஆனால் கோபி உனக்கு வாய்ப்பே நான் தான் வாங்கி கொடுத்தேன் என்று சொல்லிக் காட்டும் போது எழில் அப்படிப்பட்ட வாய்ப்பை எனக்கு வேண்டாம். நான் தயாரிப்பாளர்களிடம் ஃபோன் பண்ணி பேசிக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். தான் என்ன பண்ணாலும் கேட்க ஆள் இல்லை என்பதற்கு ஏற்ப ஓவராக ஆட்டம் போட்ட கோபிக்கு பாக்யா அடுத்து ஒரு செக் வைக்கப் போகிறார்.

அந்த வகையில் ஆனந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வைத்து அவர் மூலம் கோபி மீது புகார் கொடுக்க வைத்து விட்டார். அதன் அடிப்படையில் போலீஸ், ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை அரெஸ்ட் பண்ணி ஜிப்பில் ஏற்றி கம்பி என்ன வைக்கப் போகிறார்கள். இதனை அடுத்து பாக்கியா சொன்னபடி கோபியை விட அடுத்தடுத்து உயர்ந்து ஒரு தொழிலதிபராக வளர்ந்து காட்டப் போகிறார்.

- Advertisement -

Trending News