Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்கியராஜ் திடீர் ராஜினாமா.. சர்கார் பிரச்சினையால் மிரட்டப்பட்டாரா? பரபரப்பில் கோலிவுட்
சர்கார் படத்தின் கதை பிரச்சினைகளை சுமூகமாக முடித்து வைத்தார் எழுத்தாளர் சங்கத் தலைவர் K.பாக்கியராஜ். அதன்பின்னர் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அளித்த பேட்டியில் கூறுகையில் K.பாக்கியராஜ் அவர்களை பாராட்டியும் இதுபோன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் இன்று சற்றுமுன் கே.பாக்யராஜ் அவர்கள் தனது தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கம் இல்லை என்று கருதப்படுகிறது. இவர் மகன் சாந்தனு தளபதியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

shanthanu-vijay-sarkar
இப்பதவியில் நேர்மையாக இருந்து முதல் வழக்காக அவர் எடுத்துக்கொண்டது சர்கார் பிரச்சினை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் வழக்கிலேயே அவர் ஆட்டம் காட்டி விட்டார்.
கே.பாக்யராஜ் அவர்கள் கூறுகையில் சர்கார் படக்கதை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்த நிலையில் பதவி விலகுகிறேன். முக்கியமான காரணமாக நான் நினைக்கிறது சங்கத்தின் ஒரு சில விதிமுறைகள் அவர் கொண்டு வந்ததாகவும் அதை யாருமே ஏற்று நடக்கவில்லை. அதை உடனடியாக சரி செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளன் உள்ள தலையாய கடமையாக நினைக்கிறேன்.
அதற்கு ஒரே வழி நான் உள்பட என்ன மாதிரியே போட்டி இல்லாமல் வந்து எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் பொறுப்புக்கு வருவது தான். சாந்தனுவின் ‘first day first show’ விஜய் ரசிகர்களுடன் உறுதியாகிவிட்டது என்பது ஒரு மகிழ்ச்சி தான்.
