ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கோபி நடத்திய அரங்கேற்றத்தில் தனி மரமாக நிற்கப் போகும் பாக்கியா.. 3 பிள்ளைகளை கவுக்க போடும் திட்டம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் வேலைபோன விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் கோபி மற்றும் எழிலிடம் மட்டும் சொல்லி இருக்கிறார். இதனால் எப்படி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அடுத்த வேலையை தேட வேண்டும் என்ற குழப்பத்திலேயே நடை பயிற்சிக்கு போகிறார். அங்கே போன இடத்தில் கோபி வந்து பேசுகிறார்.

அப்பொழுது எதைப் பற்றியும் நீ கவலைப்படாமல் என்னுடைய ஹோட்டலுக்கு வந்து பொறுமையாக வேலை தேடு. நானும் உனக்கு உதவும் வகையில் நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்வேன் என்று பொறுப்பான அப்பாவாக இருப்பது போல் பேசுகிறார். அப்பொழுது எழிலுக்கும் ஒரு வாய்ப்பு வரப்போகிறது. என்னுடன் நண்பர் படம் தயாரிக்க ரெடியாக இருக்கிறார்.

அவரை எழில் சந்தித்து விட்டால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும். எழிலுடைய கனவும் நிறைவேறும் என்று கோபி அவருடைய நண்பரின் விசிட்டிங் கார்டை செழியன் இடம் கொடுக்கிறார். அதை வாங்கிய செழியன் ரொம்பவே சந்தோஷப்பட்டு கோபியை பாராட்டி பேசுகிறார். அப்பொழுது கோபி, எப்போதுமே எனக்கு நீங்க மூன்று பேரும் பிள்ளைகள்தான். உங்களுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சும்மா வாய் வார்த்தைக்கு உங்க அம்மாவை மாதிரி சொல்ல மாட்டேன்.

நிச்சயம் நான் உங்களை நல்லபடியாக ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்ப்பேன் என்று சொல்கிறார். பிறகு இந்த வாய்ப்பு என்னால் தான் கிடைத்தது என்று எழிலுக்கு இப்பொழுது தெரிய வேண்டாம். நீ உனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் கிடைத்தது என்று சொல்லிக் கொடு என சொல்லிவிட்டு கோபி கிளம்பி விடுகிறார். இதனை அடுத்து இனியா, பாக்யாவை கூட்டிட்டு கல்லூரிக்கு போகிறார்.

அங்கே போனதும் இனியாவின் கல்லூரி ஆசிரியர் பாக்யாவிடம் இனியா டான்ஸ் நல்லா பண்ணுகிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் ஒரு டான்ஸ் மாஸ்டர் வேண்டும். அப்படி இல்லை என்றால் எனக்குத் தெரிந்த ஒரு டான்ஸ் பள்ளி இருக்கிறது. அங்கே போய் சேர்த்து விட்டால் இனியாவுக்கு கொஞ்சம் ஈசியாக இருக்கும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

உடனே பாக்கியா, இனியாவை கூட்டிட்டு அந்த டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே போய் பார்த்தால் யுவராஜ் காயத்ரி நடத்தும் டான்ஸ் ஸ்டுடியோ. பிறகு இவர்களிடம் பேசிய பாக்கியா இது நம்மளுக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லி இனியாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். உடனே இனியாவும், பாக்யாவிடம் கெஞ்சிக் கொண்டே போகிறார்.

ஆனால் பாக்கியா, தற்போது குடும்பம் இருக்கும் சூழலில் இதெல்லாம் தேவையில்லாமல் இழுத்துக் கொள்ள முடியாது. அதனால் உனக்கு தெரிந்த டான்ஸை மட்டும் ஆடிட்டு வா என்று சொல்லுகிறார். இதை தூரத்தில் இருந்து பார்த்த கோபி, இனியாவிற்கு ஏதோ பிரச்சினை என்று நினைத்து பேச முயற்சி எடுக்கிறார். ஆனால் பக்கத்தில் இருந்த ராதிகா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எது வேண்டுமானாலும் பாக்யா பார்த்துக் கொள்வார் நீங்க கிளம்புங்க என்று சொல்லி கூட்டிட்டு போய்விடுகிறார்.

இதனை அடுத்து இனியாவை தனிப்பட்ட முறையில் கோபி சந்தித்து டான்ஸ் கிளாஸில் சேர்த்து விட்டு பாக்யாவுக்கு தெரியாமல் இனியாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கோபி இந்த மாதிரி வேலையை பார்க்கப் போகிறார். இப்படியே மூன்று பிள்ளைகளையும் கவித்து அவர் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக கோபி காய் நகர்த்தி வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News